ஆஸி தொடரில் ஓப்பனிங்கில் இவர் களமிறங்கினால் நிச்சயம் இரட்டை சதம் அடிக்க முடியும் – ஆகாஷ் சோப்ரா ஓபன்டாக்

Chopra

கடந்த சில தினங்களாகவே சமூகவலைதளத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடர் குறித்த தகவல்களே அதிக அளவில் பரவிவருகின்றன. ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி, நான்கு டெஸ்ட் போட்டிகள் என மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.

INDvsAUS

இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்று தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு தற்போது தொடரில் விளையாட தயாராக உள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது போட்டி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை(நாளை) துவங்க உள்ளது. கடந்த முறை இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்டதால் இம்முறையும் சில தொடர்களை கைப்பற்ற தீவிரம் காட்டும்.

அதேபோன்று ஆஸ்திரேலிய அணியும் கடந்த முறை அடைந்த தோல்விக்கு பழி வாங்கும் விதமாக இந்திய அணியை வீழ்த்தி ஆக வேண்டுமென்று மும்முரம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து பல்வேறு விமர்சகர்களும், முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த தொடர் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

Rahul

வரும் ஆஸ்திரேலிய தொடரில் என்னைப்பொறுத்தவரை தவானுடன் மாயங்க் அகர்வால் அல்லது ராகுல் ஆகியோர் துவக்க வீரராக களம் இறங்கலாம். ரோகித் இந்த தொடரில் விளையாட விட்டால் நிச்சயம் ஷிகர் தவானுடன் இவர்கள் இருவரில் ஒருவரே விளையாடவேண்டும். ஆனால் என்னை பொறுத்தவரை ராகுல் விளையாடினால் அவரால் சிறப்பாக விளையாட முடியும் மேலும் ரோஹித்துக்கு அடுத்து ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதத்தை அடிக்கும் தகுதி ராகுலிடம் உள்ளது.

- Advertisement -

Rahul

ஐபிஎல் தொடரில் அவர் தனது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் சில சதங்களை விளாசியுள்ளார். ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கினால் நிச்சயம் இரட்டை செஞ்சுரி அடிக்க கூட வாய்ப்பு உள்ளது. அந்த அளவிற்கு அவர் திறமையானவர். மேலும் எந்த இடத்தில் இறங்கினாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது விக்கெட் கீப்பிங் மேற்கொண்டு வருவதால் தவிர்க்க முடியாத வீரராக ராகுல் மாறியுள்ளதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.