சிஎஸ்கே அணி கேமரூன் க்ரீனை 20 கோடிக்கு மல்லுக்கட்டி வாங்க மாட்டாங்க.. இதான் 2 காரணம்.. ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra
- Advertisement -

ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இம்முறை நடைபெறும் மினி ஏலத்தில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கத் தயாராகியுள்ளன. அந்த வகையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் சிஎஸ்கே 2026இல் கம்பேக் கொடுப்பதற்கு தேவையான வீரர்களை வாங்கத் தயாராகியுள்ளது.

கடந்த வருடம் மிகவும் மோசமாக விளையாடிய சிஎஸ்கே முதல் முறையாக புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்தது. அதனால் 2026இல் கம்பேக் கொடுப்பதற்காக சுமாரான வீரர்களை கழற்றி விட்ட சிஎஸ்கே இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. அந்த வாய்ப்பில் ஆயுஷ் மாத்ரே, உர்வில், தேவால்ட் ப்ரேவிஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி தங்களது திறமையை நிரூபித்தனர்.

- Advertisement -

கேமரூன் க்ரீனை வாங்காது:

அதனால் 2026இல் அவர்களை தக்க வைத்த சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் காயத்திலிருந்து மீண்டும் விளையாடுவது பலமாக பார்க்கப்படுகிறது. அது போக ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷாம் கரன் ஆகியோரை ராஜஸ்தானுக்கு கொடுத்த சிஎஸ்கே சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் வாங்கியது. அதனால் அந்த அணிக்கு டாப் 5 இடங்களில் ஆயுஷ் மாத்ரே, ருதுராஜ், சாம்சன், உர்வில் பட்டேல், தேவால்ட் ப்ரேவிஸ் விளையாடத் தயாராக உள்ளனர்.

தற்போதைய நிலைமையில் லோயர் ஆர்டரில் ஜடேஜாவுக்கு பதில் விளையாடி ஃபினிஷிங் செய்யக்கூடிய ஆல் ரவுண்டர் மட்டுமே சிஎஸ்கே அணிக்கு தேவைப்படுகிறது. அது போன்ற சூழ்நிலையில் ஆஸ்திரேலியா வீரர் கேமரூன் கிரீனை சிஎஸ்கே பல கோடிகளை கொடுத்து வாங்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்நிலையில் சிஎஸ்கே ஏலத்தில் ஒரு வீரருக்காக பல கோடிகளை செலவழிக்கக்கூடிய அணி கிடையாது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

2 காரணம் என்ன:

மேலும் டாப் 6 இடங்களில் விளையாடுவதற்கு தேவையான தரமான வீரர்கள் இருப்பதால் சிஎஸ்கே கேமரூன் கிரீனை வலுக்கட்டாயமாக வாங்காது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சிஎஸ்கே ஒரு வீரரை 25 – 30 கோடிகளுக்கு வாங்குவது மிகவும் அரிதானது. அது அவர்களுடைய ஸ்டைலும் கிடையாது. அவர்கள் கேமரூன் கிரீனை வாங்க சிறிது நேரம் முயற்சித்து விட்டு வேண்டாம் என்று சொல்லக்கூடும்”

இதையும் படிங்க: துணை கேப்டனா இருந்தா என்ன? தைரியமா அந்த முடிவை எடுங்க.. சுப்மன் கில் குறித்து – முகமது கைப் கருத்து

“ஒருவேளை வாங்காவிட்டாலும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். எனவே க்ரீன் மீது சிஎஸ்கே அதிக ஆர்வத்தைக் காட்டாது. இருப்பினும் அவர்கள் ஒரு மிடில் ஆர்டரை பேட்ஸ்மேனை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். அவர்களுடைய டாப் 6 இடங்கள் நன்றாக இருப்பது போல் தெரிகிறது. அதில் கொஞ்சம் அனுபவம் மட்டுமே குறைவாக தெரிகிறது. எனவே அவர்கள் ஒரு வெளிநாட்டு வாங்கி விளையாட வைக்க விரும்பலாம்” என்று கூறினார்.

Advertisement