தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் 4 ரன்களில் ஆட்டமிழந்த சுப்மன் கில் இரண்டாவது போட்டியின் போதும் கோல்டன் டக் அவுட்டாகி வெளியேறியது பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சமீபத்தில் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வழங்கப்பட்ட அவருக்கு துவக்க வீரருக்கான இடமும் வழங்கப்பட்டது. அதன் காரணமாக சஞ்சு சாம்சனின் இடம் பறிபோனது.
சுப்மன் கில்லை தற்போதைக்கு அணியிலிருந்து நீக்க வேண்டும் : முகமது கைப்
டி20 போட்டிகளை பொறுத்த வரை துவக்க வீரராக அற்புதமான பார்மில் விளையாடி வந்த சஞ்சு சாம்சனை திடீரென பிளேயிங் லெவனில் இருந்து நீக்கி அவருக்கு பதிலாக சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த வேளையில் தொடர்ச்சியாக சுப்மன் கில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வருவதும் பலரது மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
அதோடு சுப்மன் கில்லை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை மீண்டும் துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றது. இந்நிலையில் சுப்மன் கில்லின் இந்த மோசமான பேட்டிங் ஃபார்ம் குறித்த தனது விமர்சனங்களை முன் வைத்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் கில்லை அடுத்த போட்டியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை விளையாட வைக்கலாம் என்று தனது கருத்தினை முன் வைத்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த தொடரில் சுப்மன் கில் அனைத்துமே முயற்சி செய்து பார்த்து விட்டார் என்று நினைக்கிறேன். அவர் போட்டியின் துவக்கத்திலேயே பெரிய ஷாட் அடி ஆட்டமிழந்து வெளியேறி வருகிறார். எனவே தற்போதைக்கு அவர் ஓய்வு தேவை. சஞ்சு சாம்சன் போன்ற ஒரு டாப் பிளேயர் நல்ல ரன் குவிப்பில் இருக்கும்போது அவரை நீக்கிவிட்டு சுப்மன் கில்லை விளையாட வைத்தது தவறு.
சுப்மன் கில் துணை கேப்டன் தான் என்றாலும் அவரை பிளேயிங் லெவனில் இருந்து நீக்குவது தவறு கிடையாது. ஏனெனில் கடந்த காலங்களிலும் இதுபோன்று துணை கேப்டன் மோசமான பார்மில் இருந்தபோது அணியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த தென்னாப்பிரிக்க தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் சுப்மன் கில்லை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக சாம்சனை விளையாட வைக்க வேண்டும்.
இதையும் படிங்க : 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – விவரம் இதோ
சஞ்சு சாம்சனை பொருத்தவரை டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக ஐந்து போட்டிக்குள் மூன்று சதங்களையும் விளாசி இருக்கிறார். எனவே அவரை அணிக்குள் மீண்டும் கொண்டு வர வேண்டும் என முகமது கைப் கூறியுள்ளார்.



