3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏற்படவுள்ள 2 மாற்றங்கள் – விவரம் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை இன்றைக்கு பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளனர்.

3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நாளை டிசம்பர் 14-ஆம் தேதி தரம்சாலா நகரில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த 3 ஆவது போட்டியானது இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இரண்டாவது போட்டியில் அடைந்த மோசமான தோல்விக்கு பின்னர் நிச்சயம் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இரண்டு மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களாக மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் துவக்க வீரராக விளையாட வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது.

அதேபோன்று ஷிவம் துபேவிடம் இருந்து பெரியளவில் சிறப்பான ஆட்டம் வெளிப்படாததால் பந்துவீச்சை பலப்படுத்தும் வகையில் ஹர்ஷித் ராணா உள்ளே வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. கேப்டன் சூர்யகுமார் யாதவின் பார்ம் மோசமாக இருந்தாலும் அவரே உலகக் கோப்பை அணியின் கேப்டன் என்பதால் அவரது இடத்தில் மாற்றம் இருக்காது என்பதால் நிச்சயம் நாளைய மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் இந்த இரண்டு முக்கிய மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஒருவேளை சுப்மன் கில் வெளியேற்றப்படும் பட்சத்தில் ஹார்டிக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படவும் அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மற்றபடி இந்த மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : தங்கச் சங்கிலியை கழட்டுங்க.. அப்போ தான் இதை செய்ய முடியும்.. ஆர்ச்சருக்கு ஹரிஷ் கிண்டலான அட்வைஸ்

1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) அக்சர் படேல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ஜிதேஷ் சர்மா, 8) ஹர்ஷித் ராணா, 9) அர்ஷ்தீப் சிங், 10) வருண் சக்கரவர்த்தி, 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.

Advertisement