ஆஷஸ் 2025/26 கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா 2 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையில் அதிரடியாக விளையாடி இம்முறை ஆஸ்திரேலியா மண்ணில் கோப்பையை வெல்வோம் என்று சொன்ன இங்கிலாந்து ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்துள்ளது.
அந்த அணியின் தோல்விக்கு பேட்டிங் துறையில் முக்கிய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றமாக விளையாடுவது முக்கிய காரணமாகியுள்ளது. குறிப்பாக சச்சினுக்கு பின் அதிக ரன்கள் குவித்துள்ள ஜோ ரூட் ஒரு சதத்தை தவிர்த்து ஏனைய இன்னிங்ஸில் சுமாராக விளையாடி பின்னடையைக் கொடுத்தார். அதே போல பவுலிங் துறையில் பென் ஸ்டோக்ஸ் தவிர்த்து மற்றவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
தங்கச் சங்கிலியைக் கழற்றுங்க:
குறிப்பாக அதிரடியான வேகத்தில் வீசக்கூடிய ஜோப்ரா ஆர்ச்சர் இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அச்சுறுத்தலைக் கொடுக்கவில்லை. காபாவில் நடைபெற்ற 2வது போட்டியில் 60+ இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் வேண்டுமென்றே 150 கிலோ மீட்டர் வேகப்பந்துகளை வீசினார். குறிப்பாக எப்படியும் வெற்றி பெற போவதில்லை என்பதால் ஸ்டீவ் ஸ்மித்தை காயமடைய வைத்து தொடரிலிருந்து வெளியேற்றுவோம் என்ற எண்ணத்துடன் அவர் பந்து வீசினார் என்று சொல்லலாம்.
மறுபுறம் அதற்காக அசராத ஸ்மித் அவருக்கு எதிராக 2 பவுண்டரி 1 சிக்ஸரை பறக்க விட்டு தக்க பதிலடி கொடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் பெரும்பாலான சமயங்களில் 130 கி.மீ வேகத்தில் பந்து வீசும் ஜோப்ரா ஆர்ச்சர் தமது கழுத்தில் இருக்கும் தங்கச்சங்கிலியை கழற்றினால் மட்டுமே கூடுதல் வேகத்தில் பவுலிங் செய்ய முடியுமென்று ரியன் ஹரிஷ் கிண்டலான ஆலோசனைக் கொடுத்துள்ளார்.
கிண்டலான ஆலோசனை:
முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ஒருவேளை அந்த தங்கச் சங்கிலியை கழற்றினால் அவரால் வேகமாக பந்து வீச முடியும். உங்களிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும் நண்பா. எனவே அதை கழற்றலாம் அல்லவா? ஆஸ்திரேலியா 60 ரன்கள் சேசிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் மட்டும் அவர் திடீரென தன்னுடைய ஹேண்ட்பிரேக்கை விடுவித்தார்”
இதையும் படிங்க: 8 பேட்ஸ்மேன்கள் இருந்தும் அக்சர் படேலுக்கு அந்த இடத்தை வழங்கியது தவறு – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
“அது அனைவருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்தது. அதே சமயம் அவர் காயத்திலிருந்து வந்த பின் அதிகமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவில்லை. டி20, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே அதிகம் விளையாடியுள்ளார். அவருடைய உடல் சிதைந்துள்ளது என்பது நமக்குத் தெரியும். அவருடைய முழங்கையும் மோசமாக இருப்பதால் வேகமாக பந்து வீசுவது கடினம். அதற்கு நீங்கள் நிறைய பயிற்சிகளை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.



