அரை சதத்தை சதமாக அடிப்பதில் டான் ப்ராட்மேனை மிஞ்சிட்டாரு.. ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் இந்திய வீரர் பாராட்டு

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் நாளில் 336/6 ரன்கள் குவித்தது. சொல்லப்போனால் ரோகித் சர்மா 14, சுப்மன் கில் 34, ஸ்ரேயாஸ் ஐயர் 27, அக்சர் படேல் 27, கேஎஸ் பரத் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

ஆனாலும் எதிர்ப்புறம் இங்கிலாந்துக்கு தனி ஒருவனாக சவாலை கொடுத்த துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அபாரமாக விளையாடி சதமடித்து 179* ரன்கள் குவித்தார். அதை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது நாளிலும் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய அவர் 19 பவுண்டரி 7 சிக்ஸருடன் தன்னுடைய முதல் இரட்டை சதமடித்து 209 ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

பிராட்மேனை மிஞ்சிட்டாரு:
இருப்பினும் இதர வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் முதல் இன்னிங்ஸில் இந்தியா 396 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பசீர், ஆண்டரசன் மற்றும் ரெஹன் அஹ்மத் தலா 3 விக்கெட்களை எடுத்தனர். அந்த வகையில் இந்த போட்டியில் இதர பேட்ஸ்மேன்கள் யாருமே 50 ரன்கள் கூட எடுக்காத நிலையில் தனி ஒருவனாக இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்த ஜெய்ஸ்வால் 209 ரன்கள் குவித்து இந்தியாவை காப்பாற்றினார்.

இந்நிலையில் டெஸ்ட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் அரை சதத்தை சதமாக மாற்றுவதில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் ப்ராட்மேனை விட ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டு வருவதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு. “ஜெய்ஸ்வால் பேட்டில் இருந்து மிகவும் அற்புதமான செயல்பாடு வந்துள்ளது. இந்த குழந்தை எவ்வளவு அழகாக பேட்டிங் செய்தது”

- Advertisement -

“ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக மட்டுமே அவர் தொடர்ந்து பந்துகளை அடிக்காமல் விட்டார். அவர் ஆண்டர்சனின் நல்ல பந்து வீச்சுக்கு நிறைய மரியாதை கொடுக்கிறார். ஆனால் சுழல், வந்த போது முதல் ஓவரிலேயே அவர் இரண்டு பவுண்டரிகள் அடித்தார். அதன் பின் அவர் தன்னை ஸ்பெஷல் பிளேயர் என்பதை காண்பித்தார். முதல் தர கிரிக்கெட்டில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்கள் அடித்த வீரர்களில் அரை சதத்தை சதமாக மாற்றுவதில் அவர் தற்போது ஜாம்பவான் டான் பிராட்மேனை விட முன்நிலையில் இருக்கிறார்” என்று கூறினார்.

இதையும் படிங்க: 19 ஃபோர்ஸ் 7 சிக்ஸ்.. தனிஒருவனாக இந்தியாவை காப்பாற்றிய ஜெய்ஸ்வால்.. சச்சின் உட்பட யாருமே செய்யாத மெகா சாதனை

அவர் கூறுவது போல இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 2 அரை சதங்கள் மற்றும் 2 சதங்கள் அடித்துள்ளார். அதை விட முதல் தர கிரிக்கெட்டில் 20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் வெறும் 4 அரை சதங்களையும் 10 சதங்களையும் அடித்துள்ளார். அதாவது 14 இன்னிங்சில் அடித்த அரை சதத்தை அவர் 10 முறை சதமாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement