ஜெய்க்கனும்ன்னா அந்த 20 வருஷ பழைய பஞ்சாங்கத்தை ஃபாலோ பண்ணாதீங்க.. ஆர்சிபி’யை விமர்சித்த ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 2
- Advertisement -

கோடைகாலத்தில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்துள்ளது. அதனால் இம்முறையும் அந்த அணி முதல் கோப்பையை வெல்லுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக ஜெய்பூரில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அந்த அணி 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 113* ரன்கள் எடுத்தார். ஆனால் அதை சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் சதமடித்து 100* (58), சஞ்சு சாம்சன் 69 (42) ரன்கள் அடித்து மிகவும் எளிதாக வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். அதனால் வழக்கம் போல இந்த தோல்விக்கும் விராட் கோலி தான் காரணம் என்று ஒரு தரப்பு ரசிகர்கள் மனசாட்சின்றி விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

பழைய பஞ்சாங்கம்:
குறிப்பாக 67 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு ஐபிஎல் வரலாற்றில் மெதுவான சதத்தை அடித்த விராட் கோலி தான் தோல்வியை சந்தித்ததற்கு காரணமாக அமைந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் உண்மையாகவே மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து 70 ரன்கள் மட்டும் அடித்த நிலையில் விராட் கோலியும் முன்கூட்டியே அவுட்டாகியிருந்தால் பெங்களூரு 150 ரன்கள் தாண்டியிருக்குமா என்பது சந்தேகமாகும்.

அது போக சஞ்சு சாம்சன் – ஜோஸ் பட்லர் 148 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து எளிதாக வெற்றியை பறிக்கும் அளவுக்கு பெங்களூரு பவுலர்கள் மோசமாக பந்து வீசியதை பற்றி யாரும் அதிகமாக பேசுவதில்லை. இந்நிலையில் கடந்த 2 தசாப்தங்களாக விராட் கோலியுடன் 3 வெளிநாட்டு பேட்ஸ்மேன்களை களமிறக்கும் பழைய பஞ்சாங்கத் திட்டத்தை கடைப்பிடிப்பதே பெங்களூரு அணியின் தோல்விக்கு காரணமாக இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்துள்ளார்.

- Advertisement -

மேலும் பெங்களூரு அணியில் தரமான ஸ்பின்னர்கள் இல்லை என்று விமர்சிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. “நீங்கள் சஹாலை கழற்றி விட்டு ஹஸரங்காவை வாங்கினீர்கள். பின்னர் அவரையும் கழற்றி விட்டு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய ஸ்பின்னர்கள் மீது முதலீடு செய்தீர்கள்”

இதையும் படிங்க: முதலில் கோச்’சை மாத்துங்க.. இந்த பேஸிக் தெரியாம எப்படி ஜெயிக்க முடியும்.. ஆர்சிபி’யை விளாசிய பதான்

“இப்படிப்பட்ட ஆர்சிபி அணியின் பந்து வீச்சு நிரந்தரமான பலவீனம் கொண்ட இணைப்பு என்பதை புரிந்து கொள்வது நீண்ட பயணமாகும். ஆனால் அதை தீர்ப்பதற்கான முயற்சி இன்னும் எடுக்கப்படவில்லை. பேட்டிங்கை பொறுத்த வரை விராட் கோலி மற்றும் 3 வெளிநாட்டு வீரர்களை வைத்து விளையாடும் திட்டம் 2 தசாப்தங்களாக வேலை செய்யாத யுக்தியாகும். பெரும்பாலான அணிகள் வேறு பாதையில் நடக்கின்றன. ஆனால் ஆர்சிபி அல்ல” என்று கூறியுள்ளார்.

Advertisement