முதலில் கோச்’சை மாத்துங்க.. இந்த பேஸிக் தெரியாம எப்படி ஜெயிக்க முடியும்.. ஆர்சிபி’யை விளாசிய பதான்

Irfan Pathan 6
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பெங்களூரு 5 போட்டிகளில் 4 தோல்விகளை பதிவு செய்து திணறி வருகிறது. குறிப்பாக ஏப்ரல் 6ஆம் தேதி ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை சந்தித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக விராட் கோலி 113*, கேப்டன் டு பிளேஸிஸ் 44 ரன்கள் எடுத்தனர். அதை சேசிங் செய்த ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் அதிரடியான சதமடித்து 100* (58), கேப்டன் சஞ்சு சாம்சன் 69 (42) ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற வைத்தனர். அதனால் 4 போட்டிகளில் நான்காவது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

- Advertisement -

யாருமே இல்ல:
இந்த தோல்விக்கு 67 பந்துகளில் 100 ரன்கள் தொட்டு மெதுவாக சதமடித்த வீரராக சாதனை படைத்த விராட் கோலி தான் காரணம் என்று பலரும் மனசாட்சியின்றி விமர்சித்து வருகின்றனர். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் வெறும் 70 ரன்கள் எடுத்த நிலையில் விராட் கோலி மட்டும் நங்கூரமாக விளையாடாமல் போயிருந்தால் பெங்களூரு 150 ரன்கள் தாண்டியிருக்குமா என்பதே கேள்விக்குறியாகும்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் 170 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய போது அதை தடுக்க பெங்களூரு அணியிடம் தரமான பவுலர் இல்லை என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த போட்டியில் அதிரடியாக 33 ரன்கள் அடித்த மஹிபால் லோம்ரர் பெங்களூரு பிட்ச்சை நன்றாக அறிந்து வைத்திருந்தும் இப்போட்டியில் தேர்வு செய்யாதது தோல்வியை கொடுத்ததாக அவர் விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இதற்கு காரணம் வெளிநாட்டு பயிற்சியாளர் தான் என்று தெரிவிக்கும் அவர் பெங்களூரு போன்ற அணிகளில் இந்தியர்கள் பயிற்சியாளராக இருக்க வேண்டுமென கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் இர்பான் பதான் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “170 ஸ்ட்ரைக் ரேட்டில் 2 பேட்ஸ்மேன்கள் விளையாடுகின்றனர். மறுபுறம் அதை தடுப்பதற்கு விக்கெட் இருப்பதற்கு தேவையான பவுலர் இல்லை”

இதையும் படிங்க: பழியை போடாதீங்க.. விராட் கோலி கிடையாது.. ஆர்சிபி தோல்விக்கு அது தான் காரணம்.. மைக்கேல் கிளார்க்

“ஆர்சிபி அணியில் விக்கெட் தேவைப்படும் போது அதை எடுத்துக் கொடுக்கும் அளவுக்கு ஒரு பவுலர் கூட இல்லை. எப்படி நீங்கள் வெற்றி பெற முடியும்? உள்ளூர் கிரிக்கெட்டில் இந்த பிட்ச்சில் தான் மகிபால் லோம்ரர் விளையாடுகிறார். ஆனால் கடந்த போட்டியில் நல்ல ஃபார்மை காண்பித்த அவர் இப்போட்டியின் பிளேயிங் லெவனில் கூட இல்லை. எனவே இது போன்ற அடிப்படை தவறுகளை தவிர்ப்பதற்கு இந்திய பயிற்சியாளர்கள் ஐபிஎல் தொடரில் செயல்பட வேண்டும். இது ஒரு எடுத்துக்காட்டு” என்று கூறியுள்ளார்.

Advertisement