இந்தியாவின் ரஷீத் கான் இவர்தான். இவர் மட்டும் சூப்பரா பவுலிங் பண்றாரு – ஆகாஷ் சோப்ரா புகழாரம்

Chopra
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் அண்மையில் நடைபெற்று முடிந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி வீரர்கள் ஒருநாள் தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றிபெற்றனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 தொடரில் வெற்றியை கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2க்கு 1 என்ற கணக்கில் தோல்வியடைந்து அதிர்ச்சி அளித்தனர்.

Dhawan

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடரின் போது இந்திய அணியின் முன்னணி வீரரான க்ருனால் பாண்டியாவுக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக இறுதி இரண்டு போட்டியில் அவருடன் சேர்த்து ஒன்பது வீரர்கள் பங்கேற்க முடியாமல் போனது. இதுவே தோல்விக்கு முக்கியக் காரணமாகவும் அமைந்தது.

இந்நிலையில் கடைசி இரண்டு போட்டிகளில் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்களுடன் களம் இறங்கி விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் கடுமையான போராட்டத்தை அளித்திருந்தது. இந்த கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடிய இளம் வீரர்கள் குறித்து பலரும் புகழ்ந்து பேசி வரும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா சுழற்பந்து வீச்சாளரான ராகுல் சாகரை வெகுவாகப் பாராட்டிப் பேசியுள்ளார்.

chahar

இதுகுறித்து அவர் கூறுகையில் : ராகுல் சாஹருக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லை. ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சாஹல் ஆகியோர் இருப்பதனால் அவருக்கு நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்து வருகிறது. வருண் சக்கரவர்த்தியும் தற்போது சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால் ராகுல் சாகர் தனக்கு கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி வருகிறார். அவருடைய பவுலிங்கில் ஒரு தனித்துவம் உள்ளது. தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் பேட்ஸ்மேன்களை அவர் வீழ்த்தி வருகிறார்.

அவர் இந்தியனின் ரஷீத் கான் என்று சொல்லலாம் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக பந்து வீசி வரும் அவர் இனி எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் அவர் வருகின்ற டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெறுவார் என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement