சஞ்சு சாம்சன் இல்ல.. 2026 ஐ.பி.எல் தொடருக்கான சி.எஸ்.கே அணியின் துவக்க வீரர்கள் இவர்கள் தான் – ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra and CSK
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மினி ஏலமானது டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி நடைபெற இருக்கும் வேளையில் இந்த மினி ஏலத்தில் பங்கேற்க இருக்கும் அனைத்து அணிகளும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை வாங்கி பலப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதோடு இந்த மினி ஏலத்திற்கு முன்னதாகவே ட்ரேடிங் முறையிலும் சில வீரர்கள் அணிமாற்றம் செய்யப்பட்டனர்.

2026 ஐ.பி.எல் தொடருக்கான சி.எஸ்.கே அணியின் துவக்க வீரர்கள் இவர்கள் தான் : ஆகாஷ் சோப்ரா

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற மிகப்பெரிய டிரேடிங்காக பார்க்கப்பட்டது ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு இடையேயான டிரேடிங் தான். ஏனெனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நிர்வாகத்துடன் ஏற்பட்டிருந்த அதிருப்தி காரணமாக அந்த அணியில் இருந்து வெளியேறுவார் என்று பேசப்பட்டு வந்தது.

- Advertisement -

அந்த வகையில் வெளியேற நினைத்த சஞ்சு சாம்சனை மினி ஏலத்திற்கு முன்னதாகவே சிஎஸ்கே அணி டிரேடிங் செய்து அணிக்குள் கொண்டு வந்துள்ளது. தோனி விரைவில் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்பதனாலே சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி தங்களது அணிக்குள் கொண்டு வந்துள்ளது. அதேவேளையில் சஞ்சு சாம்சனை வாங்கியதால் கடந்த பல ஆண்டுகளாகவே சென்னை அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வந்ததால் அவரே துவக்க வீரராக விளையாடுவார் என்று பலரும் பேசி வரும் வேளையில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் தான் துவக்க வீரர்களாக விளையாடுவார்கள் என்று முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

- Advertisement -

என்னை பொறுத்தவரை அடுத்த ஆண்டு சி.எஸ்.கே அணியின் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோரே விளையாடுவார்கள். சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்கும் சரி, இந்திய அணிக்கும் சரி துவக்க வீரராகவே சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஆனாலும் அவர் சென்னை அணியை பொருத்தவரை மூன்றாம் இடத்தில் விளையாடினால் தான் சரியாக இருக்கும்.

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில்லுக்கு பதிலாக நிதீஷ் ரெட்டி தான் ஆடுவார் – அதுக்கு காரணம் இதுதான்

அதோடு நான்காவது இடத்தில் பிரேவிஸ் இருப்பதினால் டாப் ஆர்டர் வலுவாகவே இருக்கும் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆயுஷ் மாத்ரே கடந்த ஆண்டு தான் சி.எஸ்.கே அணிக்காக அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்ததால் அவரை எதிர்கால நட்சத்திர வீரராக பார்த்து தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement