
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் நிறைவு பெற்று முடிந்தது. அதில் டெல்லி அணி நிறைய நட்சத்திர வீரர்களை வாங்கியுள்ளது. குறிப்பாக தடுமாற்றமாக விளையாடும் கேஎல் ராகுலை 14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது. அது போக ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த டு பிளேஸிஸ் டெல்லி அணிக்காக வாங்கப்பட்டுள்ளார்.
மறுபுறம் கடந்த வருடங்களில் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் இம்முறை லக்னோ அணிக்காக வாங்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக டெல்லி அணியின் கேப்டனாக செயல்படப் போவது யார் என்ற கேள்வி காணப்படுகிறது. அது போன்ற சூழ்நிலையில் லக்னோ அணியில் கடந்த வருடம் கேப்டனாக செயல்பட்ட ராகுல் அல்லது பெங்களூருவை வழி நடத்திய டு பிளேஸிஸ் ஆகியோர் டெல்லியை புதிதாக தலைமை தாங்க வாய்ப்புள்ளது.
இந்நிலையில் சமீப காலங்களில் தடுமாற்றமாக விளையாடும் கேஎல் ராகுல் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட சரியானவர் கிடையாது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அணிக்காக ஆல் ரவுண்டராக விளையாடி 2024 டி20 உலகக் கோப்பை வெல்ல உதவிய அக்சர் பட்டேல் டெல்லியை வழி நடத்துவதற்கு சரியானவர் என்று அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டெல்லி அணியின் கேப்டன் யார்? கொல்கத்தா போலவே அவர்களுடைய நிலைமையும் இருக்கிறது. அது அக்சர் பட்டேலாக இருக்கக்கூடும். அவரை கேப்டனாக நியமிக்க நான் தயங்க மாட்டேன். ஒருவேளை எனக்கு வாழ்த்து கொடுத்தால் நான் அவரை கேப்டனாக நியமிப்பேன். ஏனெனில் அண்டர்ரேட்டட் வீரரான அவர் சிறப்பாக செயல்படக் கூடியவர்”
“அணியை நன்றாக வழி நடத்தும் திறமையும் அவரிடம் இருக்கிறது. அவர் அணி வீரர்களிடம் மரியாதையும் பெறக்கூடியவர். கேஎல் ராகுல் மற்றொரு ஆப்ஷன். டு பிளேஸிஸ் மூன்றாவது தேர்வாக இருக்கலாம். ஜேக் பிரேசரை டெல்லி ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கியுள்ளதால் டு பிளேஸிஸை டெல்லி அணி தங்களுடைய முதல் போட்டியிலேயே துவக்க வீரராக பயன்படுத்த வாய்ப்பு குறைவு”
இதையும் படிங்க: 520 கோடி இருந்தாலும் ஒன்னுமே பண்ண முடியாது.. பும்ராவுக்காக கண்டிப்பா சண்டை வரும் – ஆஷிஷ் நெஹ்ரா கருத்து
“எனவே அக்சர் பட்டேல் மற்றும் ராகுல் ஆகியோருக்கு இடையே தான் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்படும் வீரர் இருப்பார்கள். களத்தில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துவதன் காரணமாக என்னுடைய தேர்வு அக்சர் பட்டேலாக இருப்பார்” என்று கூறினார். இருப்பினும் அக்ஸர் படேல் இதற்கு முன் கேப்டன்ஷிப் செய்த பெரிய அனுபவம் இல்லாததால் டெல்லி அணி கேப்டனாக நியமிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.