சி.எஸ்.கே அணியில் ரெய்னாவின் இடத்தை நிரப்ப இந்த 5 வீரர்களால் முடியும் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

Chopra
- Advertisement -

சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரும், துணை கேப்டனுமான ரெய்னா 2008 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வருகிறார். எப்போதும் சிஎஸ்கே அணியின் மிகப்பெரிய தூணாக கருதப்படும் இவர் இந்த ஆண்டும் சிஎஸ்கே அணிக்காக விளையாட துபாய் சென்றார். ஆனால் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும், தனிப்பட்ட சொந்த விவகாரம் காரணமாகவும் மீண்டும் ரெய்னா இந்தியா திரும்பினார். இதுவரை 193 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 33.34 சராசரியுடன் 5368 ரன்களை குறித்துள்ளார்.

Raina

- Advertisement -

33 வயதாகும் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சமீபத்தில் தோனியுடன் இணைந்து தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் மேலும் சிஎஸ்கே அணிக்காக தொடர்ந்து மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சிஎஸ்கே அணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, ரெய்னா விலகல் என அடுத்தடுத்த சரிவை சந்தித்து வருகிறது.

இந்நிலையில் ரெய்னா விட்டுச்சென்ற இடத்தை நிரப்பும் வாய்ப்பு உள்ள 5 வீரர்களை தேர்வு செய்து தனது கணிப்பை வெளியிட்டுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அதன்படி அவரது கணிப்பில் முதலாவதாக இருப்பவர் இந்திய அணியின் வீரரான அதிரடி வீரரான யூசப் பதான்.

Yusuf 1

யூசுப் பதான் : இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் ஏலம் போகாத அவர் ஐபிஎல் தொடரில் இதுவரை 3204 ரன்கள் அடித்துள்ளார். அதிரடி வீரரான இவர் மும்பை அணிக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய இவர் இந்த ஆண்டு ஏராளம் எடுக்கப்படாததால் சிஎஸ்கே அணி அவரை எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தனது முதல் தேர்வினை கூறியுள்ளார்.

- Advertisement -

மனோஜ் திவாரி : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக 2018 ஆம் ஆண்டு விளையாடி ய அவர் அதன் பிறகு ஏலம் போகவில்லை. மேலும் கடந்த ஆண்டு நடந்த ரஞ்சி டிராபியில் முச்சதம் அடித்த அவர் தான் இன்னும் திறனுடன் தான் இருக்கிறேன் என்று நிரூபித்துள்ளார். இதனால் அவரையும் இரண்டாவது தேர்வாக ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.

vihari

ஹனுமா விஹாரி : கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் இல் தனது கிரிக்கெட்டை தொடங்கிய அவர் டெஸ்ட் பிளேயர் என்று முத்திரை குத்தப்பட்டு பிறகு ஐபிஎல் இருந்து ஓரம் கட்டப்பட்டார். ஆனால் தற்போது உள்ள அவரது திறனை பார்க்கும்போதும் அவரும் அந்த இடத்தில் விளையாட தகுதியானவர் என்று கூறியுள்ளார்.

Dhruv

துருவ் ஷோரே : ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த இவர் சி.எஸ்.கே அணிக்காக 2 போட்டிகளில் விளையாடி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சத்தீஸ்வர் புஜாரா : அதனை தொடர்ந்து அறிந்ததாக யாரும் எதிர்பார்க்காத விதமாக சற்று ஆச்சரியம் அளிக்கும் வகையில் புஜாராவை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியில் நிரந்தர டெஸ்ட் வீரர் என்ற முத்திரை குத்தப்பட்ட புஜாராவை சிஎஸ்கே அணியின் மூன்றாவது வீரராக தேர்வு செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இருப்பினும் அவர் சௌராஷ்டிரா அணிக்காக ரயில்வே அணியை எதிர்த்து 61 பந்துகளில் சதமடித்து உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement