- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல் 2025 : தோனியால் இந்த மாதிரியான 5 வீரர்களுக்கு மறுபடியும் வாய்ப்பு கிடைக்கப் போகுது.. ஆகாஷ் சோப்ரா

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான புதிய ஏல விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி பிசிசிஐ வெளியிட்டுள்ள அந்த 8 விதிமுறைகளில் நம்பர் 7வது விதிமுறை எம்எஸ் தோனிக்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது என்று சொல்லலாம். அதாவது 2019 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெற்ற தோனி கடந்த 5 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை.

அதனால் அவரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரராக கருதி குறைந்த தொகைக்கு தக்க வைக்க அனுமதிக்குமாறு பிசிசிஐயிடம் சிஎஸ்கே கோரிக்கை வைத்தது. அதை ஏற்றுக் கொண்டுள்ள பிசிசிஐ 2021இல் கைவிடப்பட்ட அன்கேப்ட் வீரர் விதிமுறையை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இதைப் பயன்படுத்தி தோனியை 4 கோடிக்கு சிஎஸ்கே தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தோனியால் வாய்ப்பு:

இந்நிலையில் தோனிக்காக மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ள அன்கேப்ட் விதிமுறையால் மோஹித் சர்மா, பியூஸ் சாவ்லா, விஜய் சங்கர், சந்தீப் சர்மா, கரண் சர்மா போன்ற வீரர்களுக்கு 2025இல் புதிய வாய்ப்பு கிடைக்கும் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ஏனெனில் அந்த வீரர்கலள் கடைசி 5 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை.

அந்த வீரர்களில் சமீப காலங்களில் விஜய் சங்கர், கரண் சர்மா போன்றவர்கள் நல்ல செயல்பாடுகளையும் வெளிப்படுத்தவில்லை. அதனால் முந்தைய விதிமுறைகள் படி அவர்களை அவர்களது அணி நிர்வாகங்கள் கழற்றி விட அல்லது ஏலத்தில் மீண்டும் வாங்காமல் இருப்பதற்கு வாய்ப்புகள் இருந்தது. ஆனால் தற்போது அன்கேப்ட் பிளேயர் விதிமுறை வந்ததால் அவர்களுக்கு மறுபடியும் உறுதியான வாய்ப்பு கிடைக்கும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மறுபடியும் வாய்ப்பு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அன்கேப்ட் பிளேயர் விதிமுறை ஏன் உங்களுக்கு வேண்டும்? ஏனெனில் உங்களால் அதை பயன்படுத்தி ஒருவரை 4 கோடிக்கு தக்க வைக்க முடியும். எனவே அது உங்களுடைய மொத்த ஏலத் தொகையை பாதிக்காது. நீங்கள் 5 வீரர்களை தக்க வைத்தால் சுமார் 75 கோடி செலவிட வேண்டும். 6 பேருக்கு 79 கோடிகள் மட்டுமே செலவாகும். அதனால் உங்களுடைய ஏலத்தொகை குறையும்”

இதையும் படிங்க: 2 ரன்ஸ் வித்யாசம்.. ஆஸிக்கு எதிராக விராட் கோலியின் சாதனை உடைத்த ஹரி ப்ரூக்.. புதிய சாதனை

“அன்கேப்ட் பிளேயர் விதிமுறை பற்றி பேசும் போது எம்.எஸ். தோனி இருப்பார். 2008 முதலே நடப்பில் இருந்த அந்த விதிமுறை அதிகம் பயன்படுத்தாததால் நீக்கப்பட்டு தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் காரணமாக பியூஸ் சாவ்லா, மோகித் சர்மா, சந்தீப் சர்மா, விஜய் சங்கர், கரண் சர்மா, மயங் மார்கண்டே, சசாங் சிங் போன்றவர்கள் பயனடைவார்கள். ஏனெனில் அவர்களுக்கு தனியாக பணம் செலுத்த அணி நிர்வாகங்கள் தயங்கலாம். திடீரென இப்படி ஒரு விதிமுறை வருண் போது அதைப் பயன்படுத்தவே அனைவரும் விரும்புவார்கள். கண்டிப்பாக சிஎஸ்கே அணியும் 4 கோடிக்கு தோனியை தக்க வைக்கும்” என்று கூறினார்.

- Advertisement -