- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒரு காலத்தில் இந்திய பேட்ஸ்மேன்களிடம் இருந்த அந்த பலம் இப்போ காணாம போச்சு.. ஆகாஷ் சோப்ரா வேதனை

இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 230 ரன்களை அடிக்க முடியாமல் சொதப்பிய இந்தியா சமன் செய்தது. அதை விட இரண்டாவது போட்டியில் படுமோசமாக விளையாட இந்தியா 240 ரன்களை அடிக்க முடியாமல் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 240/9 ரன்கள் குவித்தது. அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 64 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் மறுபுறம் அக்சர் படேல் மட்டுமே 44 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினார்.

- Advertisement -

காணாமல் போன பலம்:
மற்ற படி விராட் கோலி, சுப்மன் கில், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், சிவம் துபே உள்ளிட்ட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் இந்தியாவை 208 ரன்களுக்கு சுருட்டிய இலங்கை டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு பதிலடி கொடுத்து 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அதன் காரணமாக 27 வருடங்கள் கழித்து இலங்கைக்கு எதிரான ஒரு இருதரப்பு ஒருநாள் தொடரை வெல்லும் வாய்ப்பு இந்தியா கோட்டை விட்டுள்ளது.

இத்தனைக்கும் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்களை கொண்ட இந்திய அணி தற்போதைய இலங்கையை விட மிகவும் வலுவான அணியாகவே இருக்கிறது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் இடம் பெற்ற 11 இலங்கை வீரர்களை விட விராட் கோலி மட்டும் தனி ஒருவனாக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த அனுபவத்தைக் கொண்டுள்ளார்.

- Advertisement -

ஆனால் ரோஹித்தை தவிர்த்து விராட் கோலி உட்பட மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் இலங்கையின் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்தியாவை தலை குனிய வைத்துள்ளனர். இந்நிலையில் ஒரு காலத்தில் இயற்கையிலேயே இந்திய பேட்ஸ்மேன்கள் தரமான சுழல் பந்துகளை திடமாக எதிர்கொள்வார்கள் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாங்க செஞ்சது சரிதான்.. இந்தியாவின் தோல்விக்கு கம்பீரின் அந்த முடிவு காரணமில்ல.. அபிஷேக் நாயர் விளக்கம்

ஆனால் “பெஸ்ட் பிளேயர்ஸ் ஆஃப் ஸ்பின்” என்ற பெயரைக் கொண்ட இந்திய பேட்ஸ்மேன்களிடம் தற்போது அந்தத் திறமை காணாமல் போய்விட்டதாகவும் அவர் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் ஆகாஷ் சோப்ரா பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சுழலுக்கு சாதகமான பிட்ச்சில் சுழலை எதிர்த்து விளையாடும் தேர்வில் அடிக்கடி நாம் தவறி வருகிறோம். ஒரு காலத்தில் அது நம்முடைய வலுவாக இருந்தது. ஆனால் இனிமேலும் அது வலுவாக இல்லை” என்று கூறியுள்ளார்.

- Advertisement -