- Advertisement -
ஆசிய கோப்பை

அமீரகத்திடம் காட்டிய கருணையை.. பாகிஸ்தானுக்கு எதிரா காட்டுவீங்களா? சூரியகுமாரை சாடிய ஆகாஷ் சோப்ரா

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அமீரகத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. செப்டம்பர் பத்தாம் தேதி துபாயில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய அமீரகம் 57க்கு ஆல் அவுட்டானது. அடுத்து விளையாடிய இந்தியா 4.3 ஓவரில் இலக்கைத் தொட்டு எளிதாக வெற்றி பெற்று ஆசியக் கோப்பையை வெற்றிகரமாக துவங்கியது.

அந்தளவுக்கு அப்போட்டியில் கத்துக்குட்டியான அமீரகத்தை துவம்சம் செய்த இந்தியா நம்பர் ஒன் அணி என்பதற்கு அடையாளமாக செயல்பட்டது. முன்னதாக அப்போட்டியில் சிவம் துபே வீசிய 12வது ஓவரின் ஒரு பந்தை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் ஜுனைட் சித்திக் அடிக்காமல் விட்டார். அதைப் பிடித்த கீப்பர் சஞ்சு சாம்சன் ஸ்டம்ப் மேலே அடித்து விக்கெட் கேட்டார்.

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக செய்வீங்களா:

அதை 3வது நடுவர் சோதித்த போது பேட்ஸ்மேன் வெள்ளைக்கோட்டுக்கு வெளியே இருப்பது தெளிவாகத் தெரிந்ததால் அவுட் கொடுத்தார். அப்போது அப்பாவித்தனமாக வெள்ளைக்கோட்டுக்கு வெளியே நிற்கிறோம் என்று தெரியாமல் சித்திக் அவுட்டானதாக இந்திய கேப்டன் சூர்யகுமார் கருதினார். அதனால் தங்களுடைய முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்த அவர் சித்திக்கை தொடர்ந்து விளையாட அனுமதித்தது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் இதுவே அமீரக அணி பேட்ஸ்மேனிடம் காட்டிய கருணையை பாகிஸ்தானுக்கு எதிராக காட்டுவீர்களா? என்று சூர்யகுமார் மீது முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா அதிருப்தியை தெரிவித்துள்ளார். அமீரக அணிக்கு எதிராக சூரியகுமார் செய்த செயல் தேவையற்றது என்று விமர்சிக்கும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது ஒரு ஸ்பெஷலான நிகழ்வு என்று நினைக்கிறேன்”

- Advertisement -

சூர்யகுமாரின் கருணை:

“ஒருவேளை அதே நிகழ்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் போட்டியில் வெற்றி சமநிலையில் இருக்கும் போது பாகிஸ்தானின் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு எதிராக நடைபெற்றிருந்தால் சூரியகுமார் அதை செய்திருக்க மாட்டார். மாறாக மைதானத்தில் எங்கேயாவது சுற்றிக் கொண்டிருப்பார். அந்த சமயத்தில் சஞ்சு சாம்சன் நல்ல விழிப்புணர்வுடன் செயல்பட்டு பந்தை ஸ்டம்ப் மேல எறிந்தார்”

இதையும் படிங்க: சஞ்சு சாம்சனின் 22 டக் வாக்குறுதியை காப்பாற்றிய கம்பீர்.. கொஞ்சம் இதை செஞ்சா நல்லாருக்கும்.. அஸ்வின் கருத்து

“என்னைப் பொறுத்த வரை பேட்ஸ்மேன் வெள்ளைக் கோட்டைக்கு வெளியே நின்றால் அவுட். ஆனால் இந்தக் கருத்து மாறுபடும். பிரச்சனை என்னவெனில் நீங்கள் நெறிமுறைகளையும் தாராள மனப்பான்மையும் கொண்டு வரும் போது அதிகமான விவாதங்கள் வரும். இப்போதும் கூட இன்று இதை செய்த சூரியகுமார் நாளை ஏன் அதை செய்யவில்லை? அதே வழியில் ஏன் செல்லவில்லை? என்ற பேச்சுக்கள் வரலாம்” என்று கூறினார்.

- Advertisement -