நிதிஷ் ரெட்டி இந்தியாவுக்கு விளையாடக் கூடாது ஆண்டவான்னு ஹைதராபாத் வேண்டிப்பாங்க.. ஆகாஷ் சோப்ரா

aakash chopra
- Advertisement -

வங்கதேச அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாட உள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. அதில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தியாவுக்காக விளையாட தேர்வாகியுள்ளார். அதே போல நிதிஷ் ரெட்டி, மயங் யாதவ் ஆகியோர் முதல் முறையாக இந்தியாவுக்காக விளையாடத் தேர்வாகியுள்ளனர்.

அந்த இருவருமே கடந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் மற்றும் லக்னோ அணியில் சிறப்பாக விளையாடினார்கள். அதன் காரணமாக இந்திய அணிக்காக தேர்வாகியுள்ள அவர்களுக்கு வங்கதேச தொடரில் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் நித்திஷ் ரெட்டி வங்கதேச தொடரில் இந்திய அணிக்காக விளையாடி விடக்கூடாது என்று ஹைதராபாத் ஐபிஎல் நிர்வாகம் வேண்டிக் கொள்ளும் என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஹைதெராபாத் வேண்டுதல்:

ஏனெனில் 2025 ஐபிஎல் தொடரில் அன்கேப்ட் விதிமுறை மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த விதிமுறையை பயன்படுத்தி கடந்த வருடம் அசத்திய நித்திஷ் ரெட்டியை மீண்டும் ஹைதராபாத் குறைந்த விலைக்கு தக்க வைக்க முடியும். ஆனால் வங்கதேச தொடரில் இந்தியாவுக்காக விளையாடிவிட்டால் அவரை அந்த விதிமுறையை பயன்படுத்தி ஹைதெராபாத் தக்க வைக்க முடியாது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

மேலும் கேப்டன் கமின்ஸ், அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்றிச் க்ளாஸென் ஆகியோர் ஹைதராபாத் தக்க வைக்கப்பட வேண்டிய முக்கிய வீரர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் ஆகாஷ் சோப்ரா பேசியது பின்வருமாறு. “ஹைதராபாத் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரராக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்”

- Advertisement -

ஹைதெராபாத் வீரர்கள்:

“குறிப்பாக ப்ளீஸ் நிதிஷ் ரெட்டியை சர்வதேச டி20 தொடரில் விளையாட வைக்காதீர்கள் என்றே ஹைதராபாத் சொல்வார்கள். ஏனெனில் இந்தியாவுக்காக விளையாடினால் அவர் கேப்ட் வீரராக மாறி விடுவார். இம்முறை ஹைதராபாத் முதலில் தங்களுடைய கேப்டன் கமின்ஸை தக்க வைக்க வேண்டும். கேப்டனாக பொறுப்பேற்றது முதல் நன்றாக வழி நடத்தும் அவரை நீங்கள் தக்க வைக்க விரும்புவீர்கள்”

இதையும் படிங்க: 274 ரன்ஸ் 4 விக்கெட்ஸ்.. ஈஸ்வரன், ஜுரேல் போராடி ஏமாற்றம்.. ரஹானேவுக்கு எதிராக ரோஹித் ரூட்டை ருதுராஜ் எடுப்பாரா

“அதன் பின் அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், ஹென்றிச் க்ளாஸென் ஆகியோரையும் தக்க வைக்க வேண்டும். இந்த நால்வரையும் நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அபிஷேக் ஷர்மாவை தக்க வைப்பது முட்டாள்தனமானதாக இருக்காது. ஒருவேளை ஏலத்திற்குள் சென்றால் அவரை 10 – 18 கோடிகள் கொடுத்து வாங்குவதற்கு தயாராக உள்ளனர். எனவே அபிஷேக் ஷர்மா தக்க வைக்கப்பட வேண்டிய முக்கியமான வீரர்” என்று கூறினார்.

Advertisement