274 ரன்ஸ் 4 விக்கெட்ஸ்.. ஈஸ்வரன், ஜுரேல் போராடி ஏமாற்றம்.. ரஹானேவுக்கு எதிராக ரோஹித் ரூட்டை ருதுராஜ் எடுப்பாரா

- Advertisement -

இராணிக் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அக்டோபர் ஒன்றாம் தேதி லக்னோவில் துவங்கியது. அதில் ரஞ்சிக் கோப்பை சாம்பியன் மும்பையை ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி எதிர்கொள்கிறது. அப்போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆஃப் இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய மும்பை அபாரமாக விளையாடி 537 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக இளம் வீரர் சர்பராஸ் கான் இரட்டை சதமடித்து 25 பவுண்டரி 4 சிக்சருடன் 222* ரன்கள் குவித்தார். அவருடன் கேப்டன் ரஹானே 57, டானுஷ் கோட்டியான் 64 ரன்கள் எடுத்த நிலையில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு துவக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரன் நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

தவறிய சதங்கள்:

ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் ருதுராஜ் 9, சாய் சுதர்சன் 32, தேவ்தூத் படிக்கல் 16, இஷான் கிசான் 38 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து போராடிய நிலையில் எதிர்புறம் துருவ் ஜுரேல் ஜோடி சேர்ந்தார். அந்த வகையில் ஐந்தாவது விக்கெட்டுக்கு அற்புதமாக விளையாடிய அந்த ஜோடி 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியது.

அதில் நல்ல ஃபார்மில் இருக்கும் துருவ் ஜுரேல் அரை சதம் கடந்து அசத்தினார். நேரம் செல்ல செல்ல சிறப்பாக விளையாடிய அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். அதே போல மறுபுறம் 150 ரன்கள் கடந்த அபிமன்யு ஈஸ்வரன் இரட்டை சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 16 பவுண்டரி 1 சிக்ஸருடன் 191 ரன்களில் அவுட்டாகி பரிதாபமாக சென்றார்.

- Advertisement -

ரோஹித் வழி:

இறுதியில் ரெஸ்ட் ஆப் இந்தியாவை 416 ரன்களுக்கு சுருட்டிய மும்பை சார்பில் அதிகபட்சமாக சம்ஸ் முலானி, தானுஷ் கோட்டியான் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 121 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய மும்பைக்கு பிரிதிவி ஷா சிறப்பாக விளையாடி 76 ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் எதிர்ப்புறம் ஆயுஷ் மாத்ரே 14, ஹர்டிக் தோமர் 7, கேப்டன் ரஹானே 9, ஷ்ரேயாஸ் ஐயர் 8, சாம்ஸ் முலானி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்.

இதையும் படிங்க: கரீபியன் 2024 தொடரில் எங்களோட வெற்றியை திருடிட்டாங்க.. ஆண்ட்ரே ரசல் விளாசல்.. நடந்தது என்ன?

அதனால் 4வது நாள் முடிவில் 153-6 ரன்களுடன் மொத்தம் 274 ரன்கள் முன்னிலை வகிக்கும் மும்பைக்கு களத்தில் சர்பராஸ் கான்* 9, தானுஷ் கோட்டியான் 20* ரன்களில் உள்ளனர். தற்போதைய நிலையில் கடைசி நாளில் மும்பையின் எஞ்சிய 4 விக்கெட்டுகளை விரைவாக எடுத்து கான்பூர் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா போல ருதுராஜ் தலைமையிலான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அதிரடியாக விளையாடினால் மட்டுமே வெல்ல முடியும். இல்லையேல் மும்பை வெற்றி பெறுவதற்கே வாய்ப்புள்ளது. அல்லது இரு அணிகளும் போராடினால் போட்டி டிராவில் முடிவடையலாம்.

Advertisement