- Advertisement -
ஐ.பி.எல்

போட்டிக்கு சாம்சனும் இல்ல பண்ட் சார்.. அவங்களை அதிரவிட்டு 2026 டி20 உ.கோ வாய்ப்பை பிடிங்க.. ஆகாஷ் சோப்ரா

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் அந்தத் தொடரில் 27 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாக செயல்பட உள்ளார். இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் இன்னும் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடிக்கவில்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

மறுபுறம் சமீபத்திய வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களில் அடுத்தடுத்த சதங்களை அடித்த சஞ்சு சாம்சன் இந்திய அணியில் ஓரளவு நிலையான இடத்தைப் பிடித்துள்ளார். எனவே 2026 டி20 உலகக் கோப்பையில் ரிஷப் பண்ட் வாய்ப்பு பெறுவது கடினம் என்று அவர் கூறியுள்ளார். ஒருவேளை அந்த வாய்ப்பை பிடிக்க வேண்டுமெனில் 2025 ஐபிஎல் தொடரில் அவர் அசத்த வேண்டுமென ஆகாஷ் சோப்ரா அறிவுறுத்தியுள்ளார்.

- Advertisement -

சிறந்த வாய்ப்பு:

எனவே இந்த சீசனில் ரிசப் பண்ட் அதிரடியாக விளையாடி தேர்வுக்குழுவை அதிர விட்டு வாய்ப்பைப் பிடிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட்க்கு பெரிய வாய்ப்பு இருக்கிறது. அவர் தற்போது இந்திய டி20 அணியில் அங்கமாக இல்லை. அவரைப் போன்ற வலுவான வீரர் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்தாதது ரசிகர்களுக்கும் ஆச்சரியமாகவே இருந்து வருகிறது”

“எனவே இது உங்களுக்கான வருடம் சார். இங்கே வந்து நிறைய ரன்கள் அடித்து அனைவரையும் அதிர விடுங்கள். அவர் எங்கே விளையாடுவார் என்ற கேள்வியும் இருக்கிறது. ஆனால் இங்கே சஞ்சு சாம்சன் உங்களுக்கு போட்டியாக இல்லை. கேப்டனாக இருப்பதால் நீங்கள் உங்களுடைய இடத்தை சரியாக உருவாக்கிக் கொள்ள முடியும். உங்களுக்கு நல்ல துவக்கம் கிடைத்தால் மூன்றாவது இடத்தில் விளையாட வாருங்கள்”

- Advertisement -

இந்திய டி20 அணி:

“மற்ற அனைத்து இடது கை பேட்ஸ்மேன்களை 4, 5, 6வது இடங்களில் களம் இறக்க வையுங்கள். இங்கே உங்களுக்கு 2 வேலை இருக்கிறது. முதலில் உங்களது அணியை முன்னோக்கி வழி நடத்துங்கள். அதை சரியாக செய்தால் கேப்டனாக உங்களுக்கு நிறைய அங்கீகாரம் கிடைக்கும். இரண்டாவதாக நீங்கள் ரன்கள் அடித்தால் இந்திய டி20 அணியில் வாய்ப்பு வரும்”

இதையும் படிங்க: ரசிகர்கள் எதிர்ப்பு சொன்னப்போ ஓடி ஒளியல.. கடவுள் இந்த ஸ்கிரிப்டை எழுதி 360 டிகிரி மாத்திட்டாரு.. பாண்டியா உருக்கம்

“தற்போதைய இந்திய டி20 அணி 2026 உலகக் கோப்பையில் விளையாடும் என்று நான் நினைக்கவில்லை. அந்த அணிக்கான தேர்வுகள் மாறக்கூடும். எனவே அதை முன்னோக்கிச் செல்லும் நேரத்தில் ஐபிஎல் வீரர்களை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்காற்றும். அதனால் ரிஷப் பண்ட்க்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக நான் பார்க்கிறேன்” எனக் கூறினார்.

- Advertisement -