ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இம்முறை மெகா ஏலம் நடைபெற உள்ளதால் நிறைய அணிகளிலிருந்து நட்சத்திர வீரர்கள் வெளியேற உள்ளனர். அந்த வகையில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியிலிருந்து இதுவரை கேப்டனாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் விலக உள்ளார்.
2018, 2019 ஐபிஎல் தொடர்களில் பஞ்சாப் அணியில் அதிரடியாக விளையாடிய அவர் ஒரு கட்டத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி முந்தி அதிக சம்பளத்தை பெற்றார். அதன் காரணமாக இந்திய அணியிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேன் மற்றும் வருங்கால கேப்டனாக முன்னேறிய அவர் 2022இல் லக்னோ அணிக்காக வாங்கப்பட்டார். ஆனால் அந்த அணியில் மிகவும் மெதுவாக விளையாடிய அவர் தோல்விகளுக்கு காரணமாக அமைந்தார்.
25 – 30 கோடி:
அதன் உச்சமாக கடந்த வருடம் ஒரு போட்டியில் மிகவும் மெதுவாக விளையாடி தோல்விக்கு காரணமான அவரை லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா பொதுவெளியில் திட்டினார். அந்த வகையில் பெரிய சரிவை சந்தித்துள்ள ராகுல் லக்னோ அணியிலிருந்து விலகி ஏலத்தில் பங்கேற்பார் என்று நம்பப்படுகிறது. அதே போல டெல்லி அணி தக்க வைக்க விரும்பினாலும் ரிசப் பண்ட் அதிக சம்பளத்தை பெறுவதற்காக ஏலத்தில் பங்கேற்க முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகிய 2 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் ஐபிஎல் 2025 ஏலத்தில் பங்கேற்றால் 25 – 30 கோடிகள் வரை விலை போகக்கூடும் என்று முன்னாள் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ரிஷப் பண்ட் நிறைய பணத்தை சம்பாதிக்க உள்ளார். அது 25 அல்லது 30 கோடியாக கூட இருக்கலாம். அதே நிலைமை கே.எல் ராகுல் விஷயத்திலும் உண்மையாகலாம்”
ஆகாஷ் சோப்ரா கணிப்பு:
“ஏனெனில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் வருடத்திற்கு 500 – 600 ரன்கள் அடிப்பார்கள். சிலர் ராகுல் ஸ்ட்ரைக் ரேட் பற்றி விமர்சிக்கக்கூடும். சொல்லப்போனால் 30 வயதாகும் அவர் திருமணமாகி மெதுவாக விளையாடுவதால் முடிந்து போய்விட்டதாக ஒரு கிண்டலை சமூக வலைதளத்தில் பார்த்தேன். எனவே சிஎஸ்கே அணி அவரைப் போன்ற வீரரை வாங்குவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கிண்டலை பார்த்தேன்”
இதையும் படிங்க: பிட்ச் இல்ல.. இந்திய பேட்ஸ்மேன்களின் தடுப்பாட்டம் அப்பப்போ உடைய இதான் காரணம்.. கோச் கம்பீர் விளக்கம்
“இருப்பினும் அவர் தன்னுடைய சொந்த ஊரான பெங்களூரு அணிக்காக மீண்டும் விளையாடலாம். அல்லது பஞ்சாப், டெல்லி அணிக்காக கூட வாங்கப்படலாம். மும்பை, கொல்கத்தா போன்ற அணிகளுக்கு கூட அவரைப் போன்ற வீரர் தேவைப்படுகிறது” என்று கூறினார். இருப்பினும் ராகுல் தற்போதுள்ள ஃபார்முக்கு 20 கோடிக்கு மேலே வாங்கப்பட்டால் அது ஆச்சரியம் என்று சொல்லலாம்.