இத்தனை வருஷமா ஜெய்க்காம.. ஏலத்தை குறை சொல்லாதீங்க.. ஆர்சிபி, டெல்லி அணிகளை சாடிய ஆகாஷ் சோப்ரா

Aakash Chopra 222
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரின் வீரர்கள் ஏலத்தை நடத்துவதற்காக பிசிசிஐ முழு வீச்சல் தயாராகி வருகிறது. இம்முறை அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன் தற்போதைய விதிமுறைப்படி ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். ஆனால் அதை மாற்றி 7 – 8 வீரர்களை தக்க வைக்க அனுமதிக்குமாறு பிசிசிஐயிடம் ஐபிஎல் அணிகள் கேட்டுக் கொண்டுள்ளன.

அதே போல இம்பேக்ட் வீரர் விதிமுறையை நீக்க வேண்டுமென சில அணிகள் கேட்டுக் கொண்டதாக செய்தி வெளியானது. மேலும் சென்னை, மும்பை, ஹைதெராபாத் போன்ற அணிகள் இனிமேல் மெகா ஏலம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டன. ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் போன்ற அணிகள் 3 அல்லது 5 வருடங்களுக்கு ஒரு முறை மெகா ஏலம் வேண்டும் என்று கேட்டதாக தெரிய வந்தது.

- Advertisement -

ஏலத்தில் குறை:
ஏனெனில் பெங்களூரு, டெல்லி போன்ற அணிகள் இதுவரை கோப்பையை வெல்லவில்லை. எனவே புதிய அணியை கட்டமைப்பதற்காக அவர்கள் அடிக்கடி மெகா ஏலம் நடைபெறுவதை விரும்புகின்றனர். ஆனால் ஏற்கனவே நிறைய கோப்பைகளை வென்ற சென்னை, மும்பை போன்ற அணிகள் தங்களுக்கு கிடைத்த தரமான வீரர்களை வெளியிட விரும்பாததால் மெகா ஏலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இத்தனை வருடங்களாக கோப்பையை வெல்லாத பெங்களூரு போன்ற அணிகள் ஏலத்தை குறை சொல்வது சரியல்ல என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மறுதொடக்கம் செய்யாவிட்டால் எப்படி நாங்கள் வெல்வோம் என்று சில அணிகள் சொல்கின்றன. தற்போதைய அணி நன்றாக இல்லாததால் அதை அழிக்க விரும்புவதாக அவர்கள் சொல்கின்றனர்”

- Advertisement -

“அவர்கள் சில வீரர்களை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களை விடுவித்து புதிதாக துவங்க விரும்புகின்றனர். இல்லையென்றால் அது நியாயமற்றது. ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு 3 அல்லது 5வது வருடத்தில் மெகா ஏலத்தை நடத்த வேண்டும். இதை பெங்களூரு, டெல்லி, பஞ்சாப், போன்ற அணிகள் சொன்னதாக தெரிகிறது. ஆனால் இதற்கு நாம் ஒரு பதில் கேள்வி கேட்கலாம்”

இதையும் படிங்க: ரோஹித் சர்மா, விராட் கோலி மட்டுமல்ல.. தமிழக வீரரான அஷ்வினுக்கும் பறந்த மெசேஜ் – அவரும் ரெடியா இருக்கனுமாம்

“அதாவது ஏற்கனவே 3 அல்லது 5 வருடத்திற்கு ஒருமுறை ஏற்கனவே மெகா ஏலம் நடக்கும் நிலையில் ஏன் நீங்கள் கோப்பையை வெல்லவில்லை? உண்மையில் வருங்காலத்தில் மெகா ஏலத்தை ஒழிக்க வேண்டும் என்று சில ஐபிஎல் அணிகள் சொல்லும் காலம் வரலாம். நீங்கள் 25 பேர் கொண்ட அணியை மட்டும் அனுமதிக்கலாம். ஆனால் வீரர்களை நீண்ட காலம் வைத்திருக்க அனுமதிக்கலாம்” என்று கூறினார்.

Advertisement