9.70 கோடிக்கு இதைக் கூட செய்ய முடியல.. அஸ்வின் சிஎஸ்கே காயத்தில் உப்பை தடவுறாரு.. ஆகாஷ் சோப்ரா பேட்டி

Aakash Chopra
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் திண்டாடி வருகிறது. இந்த வருடம் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் பதினொன்றாம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் கொல்கத்தாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை படுதோல்வியை சந்தித்தது.

அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை 20 ஓவரில் 103/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் அதே ரன்களை கொல்கத்தா வெறும் 10.1 ஓவரில் எடுத்து தங்களது மூன்றாவது வெற்றியை பெற்றது. மறுபுறம் சென்னை வரலாற்றிலேயே முதல் முறையாக தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. அத்துடன் சேப்பாக்கத்தில் தொடர்ந்து 3 போட்டிகளில் 3 தோல்விகளை சந்தித்த சென்னை மோசமான சாதனை படைத்தது.

- Advertisement -

அஸ்வின் ஏமாற்றம்:

முன்னதாக அந்தப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி 2, சுனில் நரேன் 3 விக்கெட்டுகளை எடுத்து சென்னையை மடக்கும் அளவுக்கு பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருந்தது. அந்த பிட்ச்சில் தோனி அனுபவமிக்க அஸ்வினுக்கு ஆரம்பத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற நம்பிக்கையுடன் வாய்ப்பு கொடுத்தார். ஆனால் அந்த வாய்ப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாத அஸ்வின் 3 ஓவரில் 30 ரன்கள் வழங்கி சென்னையின் தோல்வியை உறுதி செய்தார்.

2015இல் சென்னை அணியை விட்டு சென்ற அவர் தற்போது இந்தியாவுக்காக இரண்டாவது அதிக விக்கெட்டுகள் எடுத்த சாதனை படைத்த வீரராக 9.70 கோடிக்கு மீண்டும் விளையாட வந்துள்ளார். ஆனால் இப்போது பெரிய அனுபவத்தைக் கொண்டிருந்தோம். அவரால் இதுவரை ஒரு போட்டியில் கூட தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்நிலையில் தோல்வி உறுதியான அப்போட்டியில் சிஎஸ்கே அணிக்காக முதன்மை ஸ்பின்னர் அஸ்வின் போராடக் கூட இல்லை என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

- Advertisement -

காயத்தில் உப்பு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சென்னை மற்றும் அஸ்வின் தங்களுக்குத் தாங்களே இந்தக் கேள்வியை கேட்டுக்கொள்ள வேண்டும். அதாவது அந்த பிட்ச்சில் சுனில் நரேன் பவுலிங் செய்த விதத்தை பாருங்கள். நீங்கள் எப்படியும் போட்டியை வெல்லப்போவதில்லை. ஆனால் நன்றாக பவுலிங் செய்திருந்தால் குறைந்தபட்சம் அடுத்த போட்டிக்கான தன்னம்பிக்கையை பெற்றிருக்க முடியும்”

இதையும் படிங்க: காகிஸோ ரபாடாவை தொடர்ந்து குஜராத் அணியிலிருந்து வெளியேறிய மற்றொரு நட்சத்திர வீரர் – விவரம் இதோ

“அவர்கள் தங்களது திட்டங்களை இன்னும் சிறப்பாக செயல்படுத்த முயற்சி செய்திருக்கலாம். அதை செய்யாத அவர்கள் போட்டியை மட்டும் இழக்காமல் தங்களுடைய பவுலிங் தன்னம்பிக்கையையும் இழந்துள்ளார்கள் என்பது சரியல்ல. அஸ்வின் 3 ஓவரில் 30 ரன்கள் வழங்கினார். இந்த சீசன் முழுவதுமே அவர் நன்றாக பௌலிங் செய்யவில்லை. அவர் சிஎஸ்கே காயத்தில் உப்பை தடவி வருகிறார்” என்று கூறினார்.

Advertisement