- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட், ரோஹித் மாதிரி வரவேண்டிய ராகுல்.. இதை செய்யலன்னா காணாம போய்டுவாரு.. ஆகாஷ் சோப்ரா

இந்திய கிரிக்கெட் அணியில் கே.எல். ராகுல் தற்போது தன்னுடைய நிலையான இடத்தை இழந்து வருகிறார். 2014ஆம் ஆண்டு அறிமுகமான அவர் ஆரம்பக் காலங்களில் மிடில் ஆர்டரில் விளையாடி தடுமாறினார். இருப்பினும் 2018 – 2019 காலகட்டங்களில் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய அவர் ஷிகர் தவானை பின்னுக்குத் தள்ளி ரோஹித் சர்மாவுடன் களமிறங்கும் துவக்க வீரராக முன்னேறியதுடன் துணை கேப்டனாகவும் அந்தஸ்து பெற்றார்.

அதனால் 2021 காலகட்டங்களில் கேஎல் ராகுலை இந்தியாவின் அடுத்த கேப்டனாக வளர்க்க பிசிசிஐ விரும்பியது. ஆனால் நாளடைவில் தம்முடைய இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக நாளடைவில் மெதுவாக விளையாடிய அவர் 2021 டி20 உலகக் கோப்பை தோல்விக்கு முக்கிய காரணமானார். அப்படியே ஐபிஎல் தொடரிலும் மெதுவாக விளையாடிய காரணத்தால் இந்திய வெள்ளைப்பந்து அணியில் ஓப்பனிங் இடத்தை இழந்த அவருடைய துணை கேப்டன்ஷிப் பதவியையும் பிசிசிஐ பறித்தது.

- Advertisement -

விராட், ரோஹித் மாதிரி:

மொத்தத்தில் தற்சமயத்தில் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியில் கேஎல் ராகுலுக்கு நிலையான இடமில்லை. டெஸ்ட் அணியிலும் சர்பராஸ் கான் போன்ற வீரர்கள் அவருக்கு போட்டியாக வந்து விட்டனர். இந்நிலையில் கேஎல் ராகுல் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா போல வந்திருக்க வேண்டியவர் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ஏமாற்றத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு பெற ராகுல் பெரிய ரன்கள் அடித்து நன்றாக விளையாட வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “தனிப்பட்ட முறையில் கேஎல் ராகுலை ஒரு வீரராக எனக்குப் பிடிக்கும். அவர் ரன்கள் அடித்தால் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வார். அவர் எப்போதுமே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் நிழல் போல இருந்தவர்”

- Advertisement -

திறமையான கேஎல் ராகுல்:

“அந்த மூவருமே பெரிய வீரர்கள். ராகுல் சூப்பரான திறமை கொண்டவர் என்று நான் கருதுகிறேன். வருங்காலத்தில் ரன்கள் அடிக்கும் வரை அவர் இந்திய அணியில் விளையாடுவார். இந்திய அணியும் அவரை உயர்வாகவே கருதுகிறது. ஆனால் இந்திய அணியில் அவருக்கு எதிரான சூழ்நிலைகள் வேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக நிறைய வீரர்கள் வந்துள்ளனர்”

இதையும் படிங்க: அவமரியாதைக்காக சொல்லல.. பாகிஸ்தானை இந்த 4 விஷயத்திலும் தோற்கடிக்க முடியும்.. அமெரிக்க வீரர் பேட்டி

“அதனால் இனிமேலும் அவருக்கு பழைய மதிப்புடன் வாய்ப்புகள் கிடைக்காது. அதே சமயம் அவர் கடினமான சூழ்நிலைகளில் நிறைய ரன்கள் அடித்துள்ளார் என்பதை நான் சொல்வேன்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து ராகுல் அடுத்து நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -