வாழ்க்கை வேகமாக சுழலுது பாருங்க.. அன்று கிண்டலடிச்சவங்க அவரை இப்போ பாராட்டுறாங்க.. ஆகாஷ் சோப்ரா பேட்டி

Aakash Chopra
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடரில் இந்திய அணி குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்தப் பிரிவில் இதுவரை விளையாடிய 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது. குறிப்பாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

நியூயார்க் நகரில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. இருப்பினும் பந்து வீச்சில் அனலாக செயல்பட்ட இந்தியா 20 ஓவரில் பாகிஸ்தானை 113/7 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றி கண்டது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்டிக் பாண்டியா 2 விக்கெட்டுகளை எடுத்து.

- Advertisement -

மாறும் வாழ்க்கை:
குறிப்பாக துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் ஏமாற்றத்தை கொடுத்தாலும் பந்து வீச்சில் 4 ஓவரில் 24 ரன்கள் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகள் எடுத்து அசத்தினர். ஐபிஎல் 2024 தொடரில் சுமாராக விளையாடியதால் ரசிகர்களின் கிண்டல்கள் மற்றும் எதிர்ப்புக்குள்ளான அவர் தற்போது இந்தியாவுக்காக அசத்தத் துவங்கியுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கிண்டலடித்து எதிப்பு தெரிவித்த இந்திய ரசிகர்கள் தற்போது பாண்டியாவை பாராட்டுவதாக முன்னாள் வீரர்கள் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

அந்த வகையில் வாழ்க்கை மிகவும் வேகமாக மாறுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியாவுக்கு ஏராளமான மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். வாழ்க்கை எப்படி மாறுகிறது என்பதை பாருங்கள். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மொத்த மைதானமும் “ஹர்திக் ஹர்திக்” என்று கூச்சலிட்டு அவரை விரும்பியது. கிரிக்கெட் மிகப்பெரிய சமன் செய்பவர்”

- Advertisement -

“அதில் நீங்கள் சிறப்பாக விளையாடினால் உங்களை திட்டியவர்கள் கூட பாராட்டி உங்களின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்வார்கள். இந்தியர்கள் ஒரு விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டமிக்கவர்கள் என்பதை நான் கற்றுக் கொண்டுள்ளேன். அதாவது 140 கோடி மக்கள் கொண்ட நம்முடைய நாட்டில் கிரிக்கெட்டை பின்பற்றுபவர்கள் உங்களை யார் என்று தெரியாவிட்டால் கூட உங்களுடைய வெற்றிக்காக பிரார்த்தனை செய்வார்கள்”

இதையும் படிங்க: பாதிலயே வேணாம்ன்னு சொன்னேன்.. இப்போ பாருங்க என்னாச்சுன்னு.. யுவராஜ் சிங்கிடம் ஷாஹித் அப்ரிடி வருத்தம்

“அதுவே மிகப்பெரிய ஆசீர்வாதம். எனவே ஹர்திக் பாண்டியாவும் ரசிகர்களை திருப்பியுள்ளார்” என்று கூறினார். முன்னதாக அந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (13) எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையும் ஹர்திக் பாண்டியா படைத்தார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement