- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஹெட்ன்னு ஒருத்தர் இருக்காரு தெரியுமா? பென் டக்கெட்டை புகழ்ந்த மைக்கேல் வாகனுக்கு.. ஜெய்ஸ்வாலுடன் பதிலடி

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக இங்கிலாந்து தங்களது சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு 371 ரன்கள் துரத்திய இங்கிலாந்துக்கு பென் பக்கெட் சதத்தை அடித்து 149 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றினார்.

சமீப காலங்களாகவே 3 வகையான கிரிக்கெட்டிலும் இங்கிலாந்துக்காக அவர் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதனால் பென் டக்கெட் தான் இங்கிலாந்தின் வீரேந்திர சேவாக் என்று முன்னாள் வீரர் டேவிட் லாய்ட் பாராட்டினார். அதன் உச்சமாக பென் டக்கெட் தற்சமயத்தில் உலகிலேயே 3 வகையான கிரிக்கெட்டிலும் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டினார்.

- Advertisement -

டிராவிஸ் ஹெட் தெரியுமா:

இந்நிலையில் பென் டக்கெட் ஆஸ்திரேலியா, இந்தியா போன்ற வெளிநாடுகளில் அசத்தியதில்லை என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். எனவே மைக்கேல் வாகன் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவிக்கும் அவர் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தான் தற்சமயத்தில் உண்மையான ஆல் ஃபார்மட் பிளேயர் என்றும் பாராட்டியுள்ளார். அந்த வரிசையில் இந்தியாவின் ஜெய்ஸ்வால் வளர்ந்து வருவதாக தெரிவிக்கும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு.

“தற்சமயத்தில் இருக்கும் வீரர்களில் பென் டக்கெட் அங்கே நிற்கிறார் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கடந்த சில வருடங்களாக 3 வகையான கிரிக்கெட்டிலும் அவருடைய புள்ளிவிவரங்களும் ஓரளவு நன்றாக இருக்கிறது. ஆனால் அதில் ஒரு எச்சரிக்கை இருக்கிறது. இதுவரை ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடாத அவர் தென்னாப்பிரிக்காவில் 3 இன்னிங்ஸ் மட்டுமே விளையாடியுள்ளார்”

- Advertisement -

டிராவிஸ் ஹெட் – ஜெய்ஸ்வால்:

“இந்தியாவிலும் அவருடைய செயல்பாடுகள் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கிறது. பாகிஸ்தானில் நன்றாக இருந்தாலும் உலகின் மற்ற பகுதிகளில் அவருடைய செயல்பாடுகள் சிறப்பாக இல்லை. இப்படி பேசும் போது நீங்கள் டிராவிஸ் ஹெட்டை பார்க்க வேண்டும். ஏனெனில் அவர் பெரிய போட்டிகளில் உயர்ந்து நின்று அசத்தினார். 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் அவருடைய ஆட்டத்தைப் பாருங்கள்”

இதையும் படிங்க: ஹெட்ன்னு ஒருத்தர் இருக்காரு தெரியுமா? பென் டக்கெட்டை புகழ்ந்த மைக்கேல் வாகனுக்கு.. ஜெய்ஸ்வாலுடன் பதிலடி

“என்னுடைய கருத்துப்படி தனிநபர் மற்றும் புள்ளிவிவரங்கள் ஆகிய 2 அடிப்படையிலும் அவர் முன்னிலையில் இருக்கிறார். ஜெய்ஸ்வாலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் திறமையைக் கொண்டுள்ளார். இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகம் விளையாடாத அவர் மேலாதிக்கம் நிறைந்த அணிகளுக்கு எதிராக சவாலைக் கொடுக்கக்கூடியவர். குறிப்பாக பஸ்பால் இருந்தால் அதற்கு சவாலாக “ஜெய்ஸ்பால்” இருக்கும்” என்று கூறினார்.

- Advertisement -