ஐசிசி தொடரில் இந்தியா தொடர்ந்து தோற்க ராசியில்லாத நீங்க தான் காரணம் – கலாய்த்த ரசிகர், ஆகாஷ் சோப்ரா பதிலடி

Aakash-Chopra
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை இறுதி போட்டியில் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் தொடர்ந்து 10வது வருடமாக ஐசிசி தொடரில் மண்ணை கவ்வி வெறும் கையுடன் நாடு திரும்பியது. குறிப்பாக தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்தாத இந்தியா பேட்டிங், பவுலிங் ஆகிய அனைத்து துறைகளிலும் மோசமாக செயல்பட்டு கொஞ்சமும் போராடாமல் தோற்றதே ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

முதலில் உலக கோப்பைக்கு முழுமையாக தயாராமல் முழுவதுமாக ஐபிஎல் தொடரில் விளையாடிவிட்டு நேரடியாக ஃபைனலில் களமிறங்கிய இந்திய பவுலர்கள் திடீரென ஒரே நாளில் சோர்வுடன் 17 ஓவர்கள் வரை வீசி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களை வாரி வழங்கிய போதே பாதி தோல்வி உறுதியானது. எஞ்சிய தோல்வி நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான்களாக கொண்டாடப்படும் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோர் ஒரு அரை சதம் கூட அடிக்காமல் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் பரிசாக கிடைத்தது. அதற்கு முன்பாகவே தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருந்த அஸ்வினை கழற்றி விட்டது தோல்விக்கு முதல் படியாக அமைந்தது.

- Advertisement -

கலாய்த்த ரசிகர்:
முன்னதாக கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு இதே இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் எம்எஸ் தோனி தலைமையில் விராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ஜடேஜா போன்ற இளம் வீரர்களுடன் களமிறங்கி சாம்பியன்ஸ் டிராபியை வென்றிருந்த இந்தியா அதன் பின் 2014, 2015, 2016, 2017, 2019, 2021 ஆகிய வருடங்களில் நடைபெற்ற 3 விதமான ஐசிசி தொடர்களிலும் பெரும்பாலும் நாக் அவுட் போட்டிகளில் முக்கிய நேரத்தில் சொதப்பி தோல்வியை சந்தித்தது.

சரி 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த ரோகித் சர்மா அந்த சோகத்தை மாற்றுவார் என்று எதிர்பார்த்த நிலையில் 2022 டி20 உலக கோப்பை மற்றும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அவராலும் எந்த மேஜிக்கையும் நிகழ்த்த முடியவில்லை. மொத்தத்தில் ஐசிசி உலக கோப்பையை வென்று ஒரு தசாப்தம் கடந்து விட்டதால் கடுப்பாகியுள்ள இந்திய ரசிகர்கள் பல்வேறு காரணங்களை சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். அந்த வரிசையில் “எப்போது நீங்கள் வர்ணையாளர்களாக வந்தீர்களோ அப்போதே கதை முடிந்தது. அதிலிருந்து தான் 10 வருடங்களாக இந்தியா உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் திணறுகிறது” என முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவை ஒரு ரசிகர் ட்விட்டரில் தாக்கினார்.

- Advertisement -

உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தினாலும் இந்தியாவுக்காக 2003 – 2004 வரையிலான காலகட்டங்களில் வெறும் 10 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி சுமாராக செயல்பட்டு வந்த வேகத்திலேயே காணாமல் போன அவர் ஓய்வுக்குப் பின் வர்ணனையாளராக மிகச் சிறப்பாக செயல்பட்டு ரசிகர்களிடம் புகழ் பெற்றுள்ளார். இருப்பினும் பெரும்பாலான சமயங்களில் சிறப்பாக செயல்படும் வீரர்களை விமர்சிப்பதும் தமிழக வீரர்களுக்கு எதிராக பேசுவதும் வழக்கமாக வைத்துள்ள அவர் பெரும்பாலான ரசிகர்களுக்கு பிடிக்காதவராகவே இருந்து வருகிறார்.

அந்த ரசிகர்களில் ஒருவர் தான் ஆகாஷ் சோப்ரா வர்ணையாளராக வந்தது முதல் இந்தியா உலகக் கோப்பையை வெல்லவில்லை என்று தைரியமாக நேரடியாக தாக்கினார். இருப்பினும் அதற்கு அசராத அவர் “2013 சாம்பியன்ஸ் டிராபியில் தான் நான் முதல் முறையாக வர்ணனையாளர் வேலையை துவங்கினேன். பின்னர் ஆசிய கோப்பையில் தொடர்ந்தேன். ஆனால் உங்களுடைய கருத்தை நான் ஏற்கிறேன். தோல்விக்கான காரணத்தை யாராவது ஒருவர் ஏற்றாக வேண்டும். அதை நான் பெருமையுடன் ஏற்க்கிறேன்” என்று அந்த ரசிகருக்கு பதிலடி கொடுத்தார்.

இதையும் படிங்க:என்னை விட ராபின் உத்தபாவிற்கு தோனி அதிக முக்கியத்துவம் கொடுத்ததுக்கு காரணம் இதுதான் – ரெய்னா விளக்கம்

அது போக 2023 உலக கோப்பையை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஆகாஷ் சோப்ரா வர்ணனையாளராக இல்லை என்பதால் இந்தியா நிச்சயம் வெல்லும் என்று மற்றொரு ரசிகரும் விமர்சித்தார். அதற்கும் அசராத அவர் “நீங்கள் உறுதியாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலை பற்றி பேசவில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் நான் அந்தப் போட்டியிலும் இல்லை” என்று பதிலடி கொடுத்தார்.

Advertisement