IND vs WI : புள்ளிவிவரங்கள் அவரின் தரத்தை பேசாது – தினேஷ் கார்த்திக்கை வியந்து பாராட்டும் முன்னாள் இந்திய வீரர்

Dinesh Karthik Ashwin
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஜூலை 29-ஆம் தேதியான நேற்று டிரினிடாட் நகரில் நடைபெற்றது அப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக 190/6 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மாவுடன் ஆச்சரியப்படும் வகையில் தொடக்க வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 44 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 24 (16) ரன்களில் அவுட்டானார்.

Dinesh Karthik 1

- Advertisement -

ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் 0, ரிஷப் பண்ட் 14 (12) ஹர்திக் பாண்டியா 1 (3) என அடுத்ததாக வந்த முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். இருப்பினும் மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா 7 பவுண்டரி 2 சிக்சருடன் 64 (44) ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். கடைசியில் ரவிந்திர ஜடேஜா 16 (13) ரன்களில் அவுட்டானதால் தடுமாறிய இந்தியாவுக்கு கடைசி ஓவர்களில் வெளுத்து வாங்கிய தினேஷ் கார்த்திக் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (19) ரன்கள் குவித்து மிரட்டலான பினிஷிங் கொடுத்தார்.

இந்தியா வெற்றி:
அதை தொடர்ந்து 191 என்ற இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு கெய்ல் மேயர்ஸ் 15 (6) சமர் ப்ரூக்ஸ் 20 (15) என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த ஜேசன் ஹோல்டர் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 42/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் காப்பாற்ற வேண்டிய கேப்டன் நிக்கோலஸ் பூரன் 18 (15), ரோமன் போவல் 14 (17), சிம்ரோன் ஹெட்மையர் 14 (15) என முக்கிய பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டாகி கைவிட்டனர்.

Arshdeep Singh IND vs WI

அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் 122/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அஸ்வின், அர்ஷிதீப் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால 68 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு கேப்டன் ரோகித் சர்மா 64 ரன்கள் எடுத்தாலும் கடைசி நேரத்தில் வெற்றியை தீர்மானிக்கும் 41* ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

தரமான டிகே:
நேற்றைய போட்டியில் ரோகித் சர்மாவின் நல்ல தொடக்கத்தை அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் வீணடிக்கும் வகையில் செயல்பட்டதால் தடுமாறிய இந்தியாவை கடைசியில் அஸ்வினுடன் 7-வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக் போட்டியை இந்தியாவின் பக்கம் மொத்தமாக திருப்பினார். இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் தரத்தை புள்ளிவிவரங்கள் பேசாது என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா மனதார பாராட்டி உள்ளார். இதுபற்றி நேற்றைய போட்டி முடிந்ததும் அவர் பேசியது பின்வருமாறு.

Aakash-Chopra-and-Dinesh-Chopra

“அறிவிக்கப்பட்டது போலவே ரோகித் சர்மா அதிக ரன்கள் அடித்திருந்தாலும் தினேஷ் கார்த்திக் தான் என்னுடைய ஆட்டநாயகன். இங்கு தான் புள்ளிவிவரங்கள் சிலவற்றை கூறிவிட்டு நிறைய அம்சங்களை மறைத்துவிடும். இப்போட்டியின் புள்ளிவிவரங்கள் ரோகித் சர்மா சிறந்த பேட்ஸ்மேனாக கூறும். அதில் சந்தேகமில்லை என்றாலும் அவர் அவுட்டானதும் இந்தியா தடுமாறியது. இருப்பினும் தினேஷ் கார்த்திக் இருந்ததால் அனைத்தும் சாத்தியமானது”

- Advertisement -

“ஸ்பெஷலான அவரிடம் இன்னும் நிறைய கிரிக்கெட் எஞ்சியுள்ளது. என்ன ஒரு வீரர், என்ன ஒரு அற்புதமான பினிஷெர். சொல்லப்போனால் உலகிலேயே 6-வது இடத்தில் பேட்டிங் செய்யும் ஸ்பெஷலிஸ்ட் வீரராக அவர் உள்ளார். அவர் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 41* (19) ரன்களை 215 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளாசினார். ஜடேஜாவுக்கு பின் 6-வது இடத்தில் அல்லாமல் 7-வது இடத்தில் வந்து இந்த வேலையைச் செய்தார்” என்று பாராட்டினார்.

Dinesh Karthik

ஆரம்பகாலங்களில் தோனி இருந்ததால் வாய்ப்பு பெறாத இவர் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராக மாறினார். அதனால் இவரின் இந்திய கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக அனைவரும் நினைத்த வேளையில் அக்டோபரில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை இந்தியாவிற்கு வெல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூர் அணியில் கடைசி நேரத்தில் களமிறங்கி பினிஷராக சொல்லி அடித்த அவர் 3 வருடங்கள் கழித்து கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

அந்த வாய்ப்பில் இதுவரை களமிறங்கிய 10 இன்னிங்சில் 166 ரன்களை 147.8 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி வரும் அவர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தனது இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார். ஏனெனில் கம்பேக் கொடுத்த பின் 10 இன்னிங்சில் 2 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் 37 வயதில் 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்ற ஒரே இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க:

மேலும் நேற்றைய போட்டியில் முதல் 12 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் அடுத்த 7 பந்துகளில் 24 ரன்களை விளாசி மிகச்சிறந்த ஃபினிஷராக செயல்பட்டார். இது போன்ற அம்சங்கள் உண்மையாகவே அவரின் தரத்தை புள்ளிவிவரங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடியாது என்பதை காட்டுகிறது.

Advertisement