- Advertisement -

IND vs ZIM : கே.எல் ராகுலின் சுயநல முடிவின் பின்னனியை உடைக்கும் முன்னாள் வீரர் – விவரம் இதோ

ஜிம்பாப்வேக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்ற வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 2 போட்டிகளிலும் அபாரமாக செயல்பட்ட இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* என தொடரை கைபற்றியுள்ளது. தலைநகர் ஹராரேயில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் மிகச் சிறப்பாக பந்து வீசிய இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு ஈடு கொடுக்க முடியாது ஜிம்பாப்வே வெறும் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதை துரத்திய இந்தியாவுக்கு ஷிகர் தவான் 81* ரன்களும் சுப்மன் கில் 82* ரன்களும் குவித்து தொடக்க வீரர்களே 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.

அதை தொடர்ந்து நடைபெற்ற 2வது போட்டியிலும் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியாவுக்கு எதிராக முதல் போட்டியை விட மோசமாக செயல்பட்ட ஜிம்பாப்வே வெறும் 161 ரன்களுக்கு சுருண்டது. அதை துரத்திய இந்தியாவுக்கு மீண்டும் ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தலா 33 ரன்களும் சஞ்சு சாம்சன் 43* (39) ரன்களும் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர்.

- Advertisement -

ரசிகர்கள் அதிருப்தி:
முன்னதாக முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசிய போது ஜிம்பாப்வே வெறும் 189 ரன்களுக்கு சுருண்டதால் அந்த போட்டி ரசிகர்களுக்கு அலுப்பு தட்டும் வகையில் அமைந்தது. அதனால் 2வது போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ராகுல் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் களமிறங்கி அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து 300 ரன்களை குவித்து தங்களது மகிழ்விக்கும் முடிவை எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மீண்டும் பந்துவீச தீர்மானித்த அவர் எதிர்பார்த்த அத்தனை ரசிகர்களும் ஏமாற்றமடையும் முடிவை எடுத்தார்.

அதைவிட இந்த தொடரில் 2 மாதங்கள் கழித்து காயத்திலிருந்து திரும்பி கேப்டனாக செயல்படும் அவர் முதல் போட்டியில் ஷிகர் தவான் – கில் ஆகியோர் 192 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைத்ததால் பேட்டிங் செய்யும் வாய்ப்பை பெறவில்லை. ஆனால் விரைவில் நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மாவுடன் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடுபவராக கருதப்படும் அவர் அதற்கு முன் ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக முதல் போட்டியில் எளிதான வெற்றியைப் பெற்றுக்கொடுத்த பார்ட்னர்களை பிரித்து 2வது போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கிய போதிலும் வெறும் 1 ரன்னில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அதன் காரணமாக சுயநலமான முடிவை எடுத்ததாக நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்தனர். இந்நிலையில் இந்தியாவுக்காக கடந்த ஜனவரியில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவில் கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் படுதோல்வியைச் சந்தித்தார். அதனால் இந்த கத்துக்குட்டி ஜிம்பாப்வேவுக்கு எதிராக எப்படியாவது தொடரை கைப்பற்றி முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற சுயநல நோக்கத்திலேயே முதலில் பேட்டிங் செய்யும் முடிவை ராகுல் எடுக்கவில்லை என முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா உண்மையை உரைக்கப் பேசியுள்ளார்.

இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “டாஸ் வென்று மீண்டும் முதலில் பந்து வீச தீர்மானித்தது முட்டாள்தனமான முடிவாகும். ஒருவேளை சூழ்நிலைகள் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்திருந்தால் அதை நீங்கள் எடுத்திருக்கலாம். அல்லது முதல் போட்டியில் நீங்கள் முதலில் பேட்டிங் செய்து தோற்றீர்களா? அல்லது இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்திருந்தால் 25/5 என்ற மோசமான தொடக்கத்தை பெற்று தோற்றுவிடுவோம் என்று பயந்தீர்களா? ஒருவேளை அப்படி நடந்தால் தானே ஒரு சவாலான போட்டியில் உங்களால் விளையாடியிருக்க முடியும்”

- Advertisement -

“இருப்பினும் ராகுலின் இடத்திலிருந்து பார்க்கும்போது அவருக்கு கேப்டன்ஷிப் செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கேப்டனாக இதுவரை அவர் முதல் வெற்றியை பதிவு செய்யாத நிலையில் அதை ஏன் சவாலான முடிவை எடுத்து ஒருவேளை தோற்றால் அடுத்த தொடர் வரை தள்ளிப் போட வேண்டும் என்ற எண்ணத்துடன் பந்து வீசலாம் என்ற முடிவை எடுத்தார். அதேபோல் இடைக்கால பயிற்சியாளராக செயல்படும் லக்ஷ்மனும் இந்த தொடரை வெல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த முடிவின் பின்னணியில் இருந்துள்ளார்”

இதையும் படிங்க:  இந்திய அணிக்கு மேலும் ஒரு இளம்வீரர் கேப்டனாக அறிவிப்பு – அதிகாரபூர்வ தகவலை வெளியிட்ட பி.சி.சி.ஐ

“ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் நீங்கள் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்திருந்தால் உங்களது சவாலை சோதித்து பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறார்கள். ஒருவேளை நீங்கள் முதலில் பேட்டிங் செய்து தோற்றிருந்தால் கூட நான் உட்பட அனைவரும் விமர்சித்திருக்க மாட்டோம்” எனக்கூறினார்.

- Advertisement -
Published by