வேற லெவல் பிளேயர்.. ஆனா சுந்தரிடம் இருக்கும் ஒரே பிரச்சனை அது தான்.. ஆகாஷ் சோப்ரா கருத்து

- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவிடம் ஃபைனலில் தோல்வியை சந்தித்த இந்தியா மீண்டும் அதே அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் முதல் படியாக நடைபெறும் இத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

அதனால் சூரியகுமார் யாதவ் தலைமையில் இத்தொடரில் களமிறங்கும் இந்திய அணியில் திலக் வர்மா, ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற முழுக்க முழுக்க இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது தமிழக ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

- Advertisement -

ஒரே பிரச்சனை:
சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டரான அவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார். ஆனால் அடிக்கடி காயத்தை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்த அவர் தம்முடைய 2வது ஒருநாள் போட்டியை 5 வருடங்கள் கழித்து 2022இல் விளையாடி மீண்டும் காயத்தை சந்தித்து வருகிறார். அந்த வகையில் கணக்கில் எண்ண முடியாத அளவுக்கு நிறைய காயங்களை சந்தித்த அவர் தற்போது மீண்டும் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் போன்ற தரமான ஆல் ரவுண்டர் டி20 கிரிக்கெட்டுக்கு மிகவும் பொருந்தக்கூடியவர் என்று ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார். ஆனாலும் அடிக்கடி காயத்தை சந்திப்பது மட்டுமே வாஷிங்டன் சுந்தரின் ஒரே பிரச்சினையாக இருப்பதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இடது கை பேட்ஸ்மேன், வலது கை ஆஃப் பிரேக் ஸ்பின்னர், பவர் பிளே ஓவர்களில் பந்து வீசக்கூடியவர் ஆகிய பல்வேறு வேலைகளை செய்யக்கூடிய வாஷிங்டன் சுந்தரை நீங்கள் ஆல் ரவுண்டராக பார்ப்பீர்கள்”

- Advertisement -

“அந்த வேலைகளை சிறப்பாக செய்யக்கூடிய அவர் சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் சிறப்பாக விளையாடி இத்தொடருக்கு வந்துள்ளார். இருப்பினும் ஃபிட்னஸ் மட்டுமே அவருடைய ஒரே பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாக எந்த நேரத்திலும் காயமடைந்து வெளியேறக்கூடிய வீரராக இருப்பது அவருடைய பிரச்சனையாக இருக்கிறது. ஆனாலும் டி20 கிரிக்கெட்டில் பல்வேறு இடங்களில் பேட்டிங் மற்றும் பவுலிங் செய்யக்கூடிய அவர் மிகவும் பயனுள்ள வீரராக இருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை”

இதையும் படிங்க: என்னோட அடுத்த இலக்கு இதுதான். ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் – ரோஹித் சர்மா கூறிய கருத்து

“அந்த நிலையில் இத்தொடரில் அவருக்கு விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. ஒருவேளை கிடைத்தாலும் அது நீடிக்குமா என்பது சந்தேகமாகும். ஏனெனில் ஏற்கனவே இந்த அணியில் நிறைய ஆல் ரவுண்டர்கள் தயாராக இருக்கின்றனர்” என்று கூறினார் அவர் கூறுவது போல சிவம் துபே, அக்சர் பட்டேல் ஆகிய ஆல் ரவுண்டர்களும் இத்தொடரில் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement