- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரொம்ப சீக்கிரம் யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும்.. அவர் அதுக்கு தகுதியானவர் – ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை தனது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு மூலம் நிரந்தர இடத்தை பிடித்து விட்டார். நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் கூட இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 258 பந்துகளை சந்தித்த அவர் 22 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் இந்திய அணி இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முக்கிய காரணமாகவும் மாறியுள்ளது.

யாஷஸ்வி ஜெய்ஸ்வால் நிறைந்த வீரராக மாறுவார் : ஆகாஷ் சோப்ரா

டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை 26 ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் ஒரேயொரு ஒருநாள் போட்டி மற்றும் 23 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். சிவப்பு பந்து கிரிக்கெட்டை பொருத்தவரை இந்திய அணியில் நிரந்தர இடம் பிடித்துள்ள அவருக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் நிரந்தர வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா நிச்சயம் மூன்று வகையான இந்திய அணியிலும் ஜெய்ஸ்வால் விரைவில் நிரந்தர இடம் பிடிப்பார் என்று பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மிக விரைவிலேயே மூன்று வகையான இந்திய அணியிலும் இடம் பிடிப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் டி20 போட்டிகளை பொறுத்தவரை அவர் ஏற்கனவே சதம் அடித்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் வருடா வருடம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக ரன்களை குவித்து வருகிறார். அதோடு நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பிடித்திருந்தார். தற்போதைக்கு சுப்மன் கில் கேப்டன் பொறுப்பின் காரணமாக டி20 போட்டிகளில் விளையாடி வருகிறார். ஆனால் நிச்சயம் இனிவரும் காலத்தில் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் துவக்க வீரராகவும் ஜெய்ஸ்வால் விளையாடுவார்.

- Advertisement -

அதோடு ஆசிய கோப்பை தொடரில் சுப்மன் கில் இடம் பிடித்திருந்தாலும் விரைவில் ஜெய்ஸ்வாலுக்கும் வாய்ப்பு வரும் என்று நினைக்கிறேன். அதேபோன்று அபிஷேக் ஷர்மா தற்போது ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் முதல் முறையாக இடம் பிடித்துள்ளார். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவருக்கு முன்னதாக ஜெய்ஸ்வாலுக்கு தான் அந்த வாய்ப்பு முதலில் கிடைத்திருக்க வேண்டும். இப்போது ரோகித் சர்மா 38 வயதை எட்டியுள்ளதால் வெகுவிரைவில் அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. உங்களுக்கு கண்டிப்பா அந்த சான்ஸ் தேடி வரும்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு – கைப் ஆறுதல்

எனவே எதிர்காலத்தில் சுப்மன் கில்லுடன் இணைந்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளுக்கான துவக்க வீரராகவும் விளையாடுவார் என்று நினைக்கிறேன். அதனால் விரைவில் இந்திய டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என மூன்று வகையான இந்திய அணியிலும் அவர் நிரந்தர இடத்தை பிடிப்பார் என்று தான் உறுதியாக நம்புவதாக ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -