நீங்கதான் எக்ஸ்பர்ட் ஆச்சே செலக்டர் வேலைக்கு விண்ணப்பிங்க – ரசிகர்கள் கோரிக்கைக்கு ஆகாஷ் சோப்ரா, பார்திவ் படேல் பதில்

parthiv patel aakash chopra
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா எதிர்பார்த்ததை போலவே நாக் அவுட் சுற்றில் படுதோல்வியை சந்தித்து வெறும் கையுடன் வெளியேறியது. இத்தனைக்கும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் அணியாக இருந்தும் அரையிறுதியில் இங்கிலாந்தின் ஒரு விக்கெட்டை கூட எடுக்க முடியாமல் கொஞ்சமும் போராடாமல் இந்தியா தோற்றதே அனைவரையும் வேதனையில் நடத்தியுள்ளது. மேலும் அந்த தொடரில் விராட் கோலி போன்ற சிலரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா உட்பட பெரும்பாலான சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

அதனால் அடுத்த 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்குமாறு கோரிக்கைகள் வலுத்தன. அதற்கு செவி சாயத்த பிசிசிஐ முதலாவதாக சமீப காலங்களாகவே அணி தேர்வில் யாரையும் திருப்தி படுத்தும் வகையில் செயல்படாமல் சுமாராக செயல்பட்ட சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவை கூண்டோடு நீக்கியுள்ளது. குறிப்பாக 2021 டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2021 டி20 உலக கோப்பை, 2022 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய முக்கிய தொடர்களில் அவர்கள் தேர்வு செய்த அணி எதிலுமே சாதிக்காத காரணத்தால் சமீப காலங்களாகவே அதிருப்தியில் இருந்த பிசிசிஐ தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

- Advertisement -

எக்ஸ்பர்ட் ஆச்சே:
அத்துடன் விரைவில் 3 வகையான அணிக்கும் வெவ்வேறு கேப்டன்களை நியமிப்பதே புதிதாக பொறுப்பேற்கும் தேர்வு குழுவின் முதன்மை வேலையாக இருக்கும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது. அத்துடன் காலியாக உள்ள தேர்வு குழுவின் பதவிக்கு தகுதியானவர்கள் வரும் நவம்பர் 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவித்துள்ள பிசிசிஐ அதற்கு குறைந்தது 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்க வேண்டும் 5 வருடங்களுக்கு முன்பாக ஓய்வு பெற்றிருக்க வேண்டும் போன்ற விதிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.

மொத்தத்தில் பிசிசிஐ எடுத்துள்ள இந்த அதிரடி முடிவை வரவேற்கும் பெரும்பாலான ரசிகர்கள் புதிய தேர்வு குழுவினராக வரப்போவது யார் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் காலியாக உள்ள தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்குமாறு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவிடம் நிறைய ரசிகர்கள் கோரிக்கை ட்விட்டரில் வைத்தனர். இந்தியாவுக்காக மிகச் சரியாக 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆகாஷ் சோப்ரா மிகப்பெரிய வல்லுனர் போல சமீப காலங்களாகவே தனது யூடியூப் பக்கத்தில் இந்தியா விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாக ப்ளேயிங் லெவனை தேர்வு செய்வது, தேர்வு செய்த வீரர்களை குறை சொல்வது, சில வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் விமர்சிப்பது போன்றவற்றை செய்து வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் வல்லுனராக இருக்கும் நீங்கள் ஏன் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க கூடாது என்று ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். அதற்கு தனது ட்விட்டரில் ஆகாஷ் சோப்ரா நைசாக பதிலளித்து நழுவியது பின்வருமாறு. “இந்த பொறுப்பை ஏதோ ஒருநாள் பெறப்போவது என்னுடைய கௌரவமாக இருக்கும். ஆனால் தற்போதைக்கு இல்லை. அதுவும் எனக்கு இல்லை” என்று கூறினார். அவரை விட சற்று அதிகமாக 25 டெஸ்ட் 38 ஒருநாள் மற்றும் 2 டி20 கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு விளையாடிய மற்றொரு முன்னாள் வீரர் பார்த்திவ் பட்டேலிடமும் இந்த கோரிக்கையை ரசிகர்கள் வைத்தனர்.

இருப்பினும் கடந்த 2020ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர் 5 வருடத்திற்கு முன்பாக ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று பிசிசிஐ விதிமுறையை தேர்வுக்குழுவுக்குள் வர முடியாது. அதனால் வருங்காலங்களில் நிச்சயம் அந்த பதவிக்கு வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் தனது ட்விட்டரில் பதிலளித்தது பின்வருமாறு :

இதையும் படிங்க : ஒரு சூறாவளி கிளம்பியதே, ரோஹித் தாண்டவம் தொடங்கியதே – உற்சாகத்தில் ஹிட்மேன் ரசிகர்கள், நடந்தது என்ன?

“மிகவும் நன்றி ஆனால் அந்த பதவிக்கு விண்ணப்பிக்க தற்போது நான் தகுதியானவனாக இல்லை. இருப்பினும் வரும் காலங்களில் அந்த பதவி எனக்கு கொடுக்கப்பட்டால் அது எனக்கு மிகப்பெரிய கௌரவமாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement