என்னை மட்டும் அவங்க குடிகாரன்னு பெயரை உண்டாக்கி கழற்றி விட்டாங்க.. பிரவீன் குமார் ஆதங்கம்

Praveen Kumar 2
- Advertisement -

முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன் குமார் 2007 – 2012 வரையிலான காலகட்டங்களில் 6 டெஸ்ட் மற்றும் 68 ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். உத்திர பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட காரணத்தால் கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார்.

அதில் புதிய பந்தை ஸ்விங் செய்து எதிரணிக்களுக்கு சவாலை கொடுத்த அவர் 6 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளும் 68 ஒருநாள் போட்டிகளில் 77 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2008 சிபி முத்தரப்பு தொடரை இந்தியா வெல்வதற்கு உதவிய அவர் 2011 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வானார்.

- Advertisement -

குடிகாரன்ன்னு பெயர்:
ஆனால் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்ததால் அவருக்கு பதிலாக ஸ்ரீசாந்த் தேர்வானது வேறு கதை. இருப்பினும் 2011 உலகக் கோப்பைக்கு பின் சில காயங்களை சந்தித்து தடுமாறி வந்த பிரவீன் குமார் பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறினார். மேலும் அந்த சமயத்தில் குடிக்கு அடிமையாகி பிரவீன் குமார் தடுமாறுகிறார் என்ற செய்திகளும் வலம் வந்தன. மறுபுறம் 2012ஆம் ஆண்டு அறிமுகமான புவனேஸ்வர் குமார் இவரை விட புதிய பந்தை ஸ்விங் செய்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார்.

அதனால் சேவாக், கம்பீர் போன்ற நட்சத்திர மூத்த வீரர்களையே அசால்டாக கழற்றி விட்ட அப்போதைய கேப்டன் தோனி இவரையும் கண்டுகொள்ளாமல் புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த வகையில் வாய்ப்பு பெறாமல் தடுமாறிய பிரவீன் குமார் ஐபிஎல் தொடரில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை, ஹைதராபாத், குஜராத் லயன்ஸ் போன்ற அணிகளுக்கு விளையாடி பின்னர் 2018ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் சீனியர்கள் அனைவருமே மது அருந்துவார்கள் என்று தெரிவிக்கும் பிரவீன் குமார் தம்மை மட்டும் அனைவரும் குடிகாரன் என்று சொல்லி கழற்றி விட்டதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியதற்கு பின்வருமாறு. “இந்திய அணியில் நான் இருந்த போது சீனியர் வீரர்கள் எண்னிடம் குடிக்காதீர்கள் அதை செய்யாதீர்கள் இதை செய்யாதீர்கள் என்று சொன்னார்கள்”

இதையும் படிங்க: அவர் மட்டும் ஓப்பனிங்கில் ஆடுனா.. லாராவின் 400 ரன்ஸ் சாதனையை உடைப்பாரு.. மைக்கேல் கிளார்க் ஓப்பன்டாக்

“இருப்பினும் அவர்கள் அனைவரும் அதை செய்வார்கள். ஆனால் நான் மட்டும் குடிப்பதாக சொல்லி அவர்கள் என்னை கலங்கப்படுத்தினார்கள். இந்த இடத்தில் எந்த வீரர்களின் பெயரையும் நான் சொல்ல விரும்பவில்லை. அனைவரும் அறிவார்கள். அதே சமயம் நான் எப்படிப்பட்டவன் என்பதை எனக்கு நெருக்கமானவர்கள் அறிவார்கள். என் மீது அனைவராலும் தவறான பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

Advertisement