2023 உ.கோ : ஆசிய கோப்பையில் சொதப்புனா ராகுலை கழற்றி விட்டு அவர செலக்ட் பண்ணுங்க – சாஸ்திரிக்கு பதிலடியுடன் கம்பீர் எதிர்ப்பு

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் நடைபெறுகிறது. அதற்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் தயாராகும் வகையிலும் இறுதிக்கட்ட வீரர்களை தேர்ந்தெடுக்க உதவும் வகையிலும் 2023 ஆசிய கோப்பை வரும் ஆகஸ்ட் 30 முதல் தூங்குகிறது. அத்தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி நீண்ட தாமதத்திற்கு பின் ஒரு வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் காயத்தை சந்தித்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் குணமடைந்து விளையாடுவார்கள் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அறிவித்துள்ளார்.

Asia-Cup

- Advertisement -

அதே போல யுவராஜ் சிங், கௌதம் கம்பீர், சுரேஷ் ரெய்னா போன்ற இடது கை பேட்ஸ்மேன்கள் தற்போதைய அணியில் இல்லை என்ற பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இதுவரை ஒருநாள் போட்டிகளிலேயே அறிமுகமாக திலக் வர்மா நேரடியாக ஆசிய கோப்பையில் தேர்வாகியுள்ளார். முன்னதாக உலகக் கோப்பை போன்ற தொடர்களில் இடது கை பேட்ஸ்மேன்கள் முக்கிய பங்காற்றுபவர்கள் என்பதால் தற்போதைய அணியில் டாப் 7 வீரர்களில் குறைந்தது 3 பேராவது இடது கை பேட்ஸ்மேன்களாக இருக்கும் வகையில் அணி தேர்வு இருக்க வேண்டுமென முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

கம்பீர் பதிலடி:
இந்நிலையில் இடது அல்லது வலது கை வீரர்கள் என்பனவற்றை தாண்டி அவர்கள் தரமானவர்களாக என்பதை மட்டும் பார்க்க வேண்டுமே தவிர இப்படி உபயோகமற்ற கருத்துக்களை தெரிவிப்பதில் அர்த்தமில்லை என ரவி சாஸ்திரிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கௌதம் கம்பீர் மறைமுகமான பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இடது அல்லது வலது கை பேட்ஸ்மேன்கள் என்பது முக்கியமல்ல. எனவே 3 இடது கை பேட்ஸ்மேன்கள் வேண்டுமென காணப்படும் விவாதங்கள் உபயோகமற்ற சிந்தனைகளாகும்”

Gautam Gambhir

“எனவே வீரர்கள் எவ்வளவு தரமாக இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டுமே தவிர அவர்கள் இடது கை பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்களா என்பதை பார்க்கக் கூடாது. ஏனெனில் இடது – வலது கை என்பதைத் தாண்டி தரமான வீரர்கள் மட்டுமே அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்துவார்கள். அதனால் ராகுல் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ரன்கள் அடித்தால் அவர்களை தாராளமாக தேர்வு செய்யலாம். மாறாக ஃபார்மில் இல்லையென்றாலும் இடதுகை வீரர்களை தேர்வு செய்யக்கூடாது. ஒருவேளை இடது கை வீரர் தேவைப்பட்டால் நல்ல ஃபார்மில் இருக்கும் தரமான ஜெய்ஸ்வாலை தேர்ந்தெடுக்கலாம்” என்று கூறினார்.

- Advertisement -

அத்துடன் கேஎல் ராகுல் ஏற்கனவே சுமாரான ஃபார்மில் இருந்த நிலையில் தற்போது காயத்திலிருந்து குணமடைந்து ஆசிய கோப்பையில் ரன்கள் அடிக்காமல் போகும் பட்சத்தில் 2023 உலகக் கோப்பையில் தேர்வு செய்யக்கூடாது என்றும் கம்பீர் எச்சரித்துள்ளார். அதே சமயம் அனுபவமில்லை என்றாலும் ஆசிய கோப்பையில் திலக் வர்மா நல்ல ரன்கள் அடிக்கும் பட்சத்தில் உலகக்கோப்பையில் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

Tilak-Varma

“திலக் வர்மாவை தேர்வு செய்துள்ள நீங்கள் ஆசிய கோப்பையில் நிச்சயம் சில போட்டிகளில் வாய்ப்பளிக்க வேண்டும். ஒருவேளை அத்தொடரில் மற்றவர்களை காட்டிலும் அவர் அதிக ரன்கள் அடிக்கும் பட்சத்தில் உலக கோப்பையிலும் வாய்ப்பு கொடுக்கலாம். ஏனெனில் உலகக்கோப்பை அணியில் யாருடைய பெயருக்கும் முன்னுரிமை கிடையாது. ஃபார்ம் தான் முக்கியமாகும். அதனால் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற பெயரை காட்டிலும் யார் நல்ல ஃபார்மில் இருக்கிறார்களோ அவர்களை தேர்வு செய்யுங்கள்”

இதையும் படிங்க:ஹூஹூம் இனிமே இவருக்கு ஒருநாள் அணியில் இடமில்லை. முடிவுக்கு வந்த சீனியரின் கதை – அடப்பாவமே இவருக்கா இப்படி?

“அந்த வகையில் திலக் வர்மா, சூரியகுமார், இஷான் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருந்தால் அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள். ஏனெனில் ரோகித் சர்மா இங்கு யாருக்கும் கேரண்டியான இடமில்லை என்று சொல்லியிருக்கிறார். எனவே காயத்திலிருந்து வரும் ராகுல் போன்றவர்கள் உலகக் கோப்பையில் இடம் பிடிக்க ரன்கள் அடித்தாக வேண்டும்” என்று கூறினார்.

Advertisement