ஹூஹூம் இனிமே இவருக்கு ஒருநாள் அணியில் இடமில்லை. முடிவுக்கு வந்த சீனியரின் கதை – அடப்பாவமே இவருக்கா இப்படி?

Bhuvi
- Advertisement -

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் ஏகப்பட்ட திறமையான வீரர்கள் இருப்பதினால் இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பதில் ஏகப்பட்ட சிரமங்கள் இருப்பதை நாம் கண்டு வருகிறோம். ஏனெனில் நம்மிடம் இருக்கும் வீரர்களை வைத்து தற்போது இரண்டு அணிகளை உருவாக்கும் அளவிற்கு பலமான வீரர்களை இந்திய அணி கொண்டுள்ளது. இதன் காரணமாக ஒவ்வொரு தொடரிலுமே எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Asia-Cup

- Advertisement -

அந்த வகையில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்களின் பட்டியலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக நடைபெற இருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறும் வீரர்கள் 50 ஓவர் உலகக் கோப்பை அணியிலும் இடம்பெற வாய்ப்புள்ளது.

இதனால் இந்த அணியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்? என்று பலரும் கூர்ந்து கவனித்து வந்தனர். அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை அணியில் பல திருப்பங்களுடன் 17 பேர் கொண்ட வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அதில் இந்திய அணியின் சீனியர் வீரரான புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதன் மூலம் அவரது ஒருநாள் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்துள்ளதாக பலரும் வருத்தப்பட்டு வருகின்றனர்.

Bhuvi

33 வயதான புவனேஸ்வர் குமார் இந்திய அணிக்காக கடந்த 2012-ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 21 டெஸ்ட் போட்டிகள், 121 ஒருநாள் போட்டிகள் மற்றும் 87 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே கழட்டி விடப்பட்ட புவனேஷ்வர் குமார் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 2022-ஆம் ஆண்டிற்கு பிறகு இதுவரை விளையாடாமல் இருந்து வருகிறார். டி20யை பொறுத்தவரை முதன்மை பவுலராக செயல்பட்டு வரும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தாலும் ஏகப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இருப்பதால் மெதுவாக வீசும் அவரை இந்திய அணி நிர்வாகம் புறக்கணித்துள்ளது.

இதையும் படிங்க : இஷான் கிஷனிடம் இருக்கும் ஒரே பிளஸ் இதுதான். அதனால் சஞ்சு சாம்சனுக்கு ஏற்பட்டுள்ள – பரிதாப நிலைமை

இதன் மூலம் கிட்டத்தட்ட அவரது ஒருநாள் கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்துள்ளது என்று கூறலாம். தற்போதைய இந்திய ஒருநாள் அணியில் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர் என பல வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளதால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement