தோனி தாக்கல் செய்த அவமதிப்பு வழக்கு. 15 ஆம் தேதி நடைபெறயிருக்கும் விசாரணை – என்ன நடந்தது?

Dhoni
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று 16 சீசர்களை நிறைவு செய்துள்ளது. இந்த ஐ.பி.எல் தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் பெற்று மும்பை அணியுடன் சாதனையை சமன் செய்துள்ளது.

CSK

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்த குற்றத்தினை ஐபிஎஸ் அதிகாரியான சம்பத்குமார் முன் வைத்திருந்தார்.

அதன் எதிரொலியாக கடந்த 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டுகளில் சென்னை அணிக்கு ஐபிஎல் தொடரில் விளையாட தடையும் விதிக்கப்பட்டது. அதன் பிறகு மேல் முறையீடு செய்யப்பட்டு மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வருகின்றனர்.

CSK vs GT

இவ்வேளையில் தனது பெயர் மற்றும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் நடந்து கொண்டதாகவும் அதன் காரணமாக அவர் 100 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்றும் 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தோனி வழக்கு தொடர்ந்து இருந்தார்.

- Advertisement -

அப்போது அந்த வழக்கை தள்ளுபடி செய்ய சம்பத்குமார் தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் தோனி தாக்கல் செய்த அந்த வழக்கிற்கு சம்பத்குமார் பதில் மனு தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததால் நீதிமன்ற அவமதிப்பு சட்டப்படி தண்டனை தர வேண்டும் என தோனி தரப்பில் கூறப்பட்டது.

இதையும் படிங்க : இளைஞர்களின் வழிகாட்டியான நீங்க இப்டி செய்யலாமா? கபில் தேவ், கவாஸ்கர், சேவாக்கிற்கு கம்பீர் முக்கிய கோரிக்கை – நடந்தது என்ன

இந்நிலையில் தோனி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும், இதுகுறித்த விசாரணை நாளை மறுதினம் ஜூன் 15-ஆம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement