MI vs SRH : அறிமுக போட்டியிலேயே இப்படி ஒரு சாதனையா – 15 வருட ஆல் டைம் தனித்துவ ஐபில் சாதனை படைத்த இளம் வீரர்

MI vs SRH
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதில் மே 21ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 69வது லீக் போட்டியில் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. அந்த போட்டியில் ஏற்கனவே லீக் சுற்றுடன் வெளியேறிய ஹைதராபாத்தை பிளே ஆப் சுற்றுக்கு செல்ல எப்படியாவது தோற்கடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் எதிர்கொண்ட மும்பை டாஸ் வென்ற முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அத தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய ஹைதராபாத்துக்கு அறிமுகமாக களமிறங்கிய இளம் வீரர் விவ்ரான்ட் சர்மா – மயங் அகர்வால் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர். அதில் இந்த சீசனில் சுமாராக செயல்பட்டு ஹைதராபாத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக வகையில் செயல்பட்ட மயங் அகர்வால் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் மும்பை பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார். அவருடன் கைகோர்த்து இளம் வீரர் விவ்ரான்ட் தனது அறிமுகப் போட்டியிலேயே மும்பை போன்ற வெற்றிகரமான அணிக்கு எதிராக தன்னுடைய முழு திறமையை வெளிப்படுத்தி அட்டகாசமாக பேட்டிங் செய்தார்.

- Advertisement -

15 வருட சாதனை:
அந்த வகையில் பவர் பிளே முடிந்தும் ஒவ்வொரு ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் குவித்த அந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மும்பைக்கு சவாலாக மாறியது. அதில் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விவ்ரான்ட் சர்மா 14 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 140 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஹைதராபாத்துக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்து 9 பவுண்டரி 2 சிக்சருடன் அரை சதமடித்து 69 (47) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சொல்லப்போனால் அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரர் என்ற 15 வருட சாதனையை தகர்த்து புதிய வரலாற்று சாதனை படைத்தார்.

இதற்கு முன் கடந்த 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட வரலாற்றின் முதல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமாக விளையாடிய ஸ்வப்னில் அஸ்னோட்கர் 60 ரன்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அப்படி முதல் போட்டியிலே அட்டகாசம் செய்த அவர் ரசிகர்களின் பாராட்டுகளுடன் வெளியேறிய நிலையில் மறுபுறம் தொடர்ந்து நங்கூரமாக நின்ற மயங் அகர்வால் ஒரு வழியாக இந்த சீசனில் முதல் முறையாக அரை சதமடித்து நிம்மதி பெருமூச்சு விட்டு ஹெல்மட்டை கழற்றி கொண்டாடினார். அதே வேகத்தில் சிறப்பாக செயல்பட்ட அவர் 8 பவுண்டரி 4 சிக்சருடன் 83 (46) ரன்கள் விளாசி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்து வந்த கிளன் பிலிப்ஸ் 1 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுக்க ஹென்றிச் க்ளாஸென் 2 பவுண்டரியுடன் 18 (13) ரன்களில் அதிரடியாக விளையாட முயற்சித்து பெவிலியன் திருப்பினார். இறுதியில் கேப்டன் மார்கரம் 13* (7) ரன்கள் எடுத்ததால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஹைதராபாத் 200/5 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக ஆகாஷ் மாத்வால் 4 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

முன்னதாக இந்த தொடரில் ஆரம்பம் முதலே பந்து வீச்சில் சுமாராக செயல்படும் மும்பை பேட்டிங்கில் அதிரடியாக விளையாடியதாலேயே இதுவரை வெற்றிகளை பெற்றுள்ளது. அத்துடன் இதற்கு முன் தொடர்ந்து 3 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை எளிதாக துரத்தி மும்பை சாதனை வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது. அந்த வகையில் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வரும் வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டியிலும் 201 ரன்களை வெற்றிகரமாக துரத்தி ப்ளே ஆப் சுற்றுக்கு செல்ல மும்பை போராடி வருகிறது.

Advertisement