CSK : பதிரானா நீங்க இதைமட்டும் பண்ணிட்டா அடுத்த பிராவோ நீங்கதான் – சீக்கா கொடுத்த ஆதரவு

Cheeka
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள வேளையில் 16-வது சீசனும் தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதோடு பிளே ஆப் சுற்றிற்க்கான வாய்ப்பையும் டெல்லி அணிக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் பிரகாசப்படுத்தியுள்ளது.

CSK 2023

- Advertisement -

கடந்த ஆண்டு மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிளே ஆப் சுற்றிற்கு கூட தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை அணியானது இந்த சீசனில் மிகச்சிறப்பாக மீண்டும் வந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. மேலும் கடந்த சீசனில் படுமோசமாக சொதப்பிய சென்னை அணி இம்முறை சரியான வீரர்களுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

அதிலும் குறிப்பாக பந்துவீச்சு துறையில் இளம் வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரானா அடுத்த மலிங்காவாக உருவெடுத்து இருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவிற்கு டெத் ஓவர்களில் அவர் துல்லியமான யார்க்கர் பந்துகளை வீசி விக்கெட்டுகளை கைப்பற்றுவதோடு வெற்றியையும் பெற்று தருகிறார்.

Pathirana

ஏற்கனவே கடந்த சில போட்டிகளுக்கு முன்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவின் போது தோனியே தன் வாயால் பதிரானா பற்றி புகழ்ந்து பேசி இருந்தார். இந்நிலையில் பதிரானாவின் தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடு காரணமாக பலரும் அவரை பாராட்டி பேசுகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியில் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பதிரானா குறித்து மிகவும் புகழ்ந்து பேசி உள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : சிஎஸ்கே ஒரு தரமான வீரரை கண்டுபிடித்துள்ளது. பதிரானா பவுலிங்கில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் மட்டும் பேட்டிங்கில் ஓரளவு கை கொடுக்கும் வீரராக மாறினால் நிச்சயம் அவர்தான் அடுத்த பிராவோவாக இருப்பார். கண்டிப்பாக அவரால் பிராவோவின் இடத்தை நிரப்ப முடியும் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளதாக ஸ்ரீகாந்த் அவரை பாராட்டி பேசி உள்ளார்.

இதையும் படிங்க : IPL 2023 : இதுவே விராட் கோலிக்கு எதிரா பாகிஸ்தான் வீரர் அப்டி பண்ணிருந்தா விடுவீங்களா? ரசிகர்களுக்கு ஆகாஷ் சோப்ரா பதிலடி

தற்போது முழுநேர பந்துவீச்சாளராக விளையாடி வரும் பதிரானா யார்க்கர் பந்து வீசுவது மட்டுமல்லாமல், ஸ்லோவர் பவுன்சர்களையும் சிறப்பாக வீசி வருவதால் அவரது பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் பேட்டிங் செய்ய தடுமாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement