வீடியோ : பிளான் போட்டு வந்த ரோஹித்தை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தல தோனி – ஹிட்மேன் மோசமான ஐபிஎல் வரலாற்று சாதனை

Rohit Sharma Dhoni
- Advertisement -

இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 6ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 49வது லீக் போட்டியில் வரலாற்றின் வெற்றிகரமான அணிகளாகவும் பரம எதிரிகளாகவும் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் கடைசி 3 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்த சென்னை இந்த போட்டியில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

மறுபுறம் கடந்த 2 போட்டிகளில் 200+ ரன்களை அடுத்தடுத்து வெற்றிகரமாக சேசிங் செய்த முதல் அணியாக சாதனை படைத்த மும்பை ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழையும் முனைப்புடன் களமிறங்கியது. குறிப்பாக சமீப காலங்களில் சேப்பாக்கத்தில் அதிக முறை தோற்கடித்த அணியாக பெருமை கொண்ட தங்களுக்கு கடந்த போட்டியில் வான்கடே மைதானத்தில் தோல்வியை பரிசளித்த சென்னைக்கு பதிலடி கொடுக்கும் எண்ணத்துடன் மும்பை களமிறங்கியது.

- Advertisement -

தோனியின் ஸ்கெட்ச்:
அந்த நிலைமையில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். குறிப்பாக மேகமூட்டத்துடன் கூடிய ஈரப்பதமான சூழ்நிலை நிலவியதால் சேசிங் செய்ய விரும்புவதாக தெரிவித்த அவர் சென்னை அணிகள் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறினார். மறுபுறம் திலக் வர்மாவுக்கு பதில் ட்ரிஷன் ஸ்டப்ஸ் சேர்க்கப்படுவதாக அறிவித்த ரோகித் சர்மா கடந்த போட்டியில் டக் அவுட்டாகி இந்த சீசனில் சுமாராக செயல்பட்டு வருவதால் இந்த போட்டியில் சென்னைக்கு ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் மிடில் ஆர்டரில் விளையாடும் திட்டத்தை கையிலெடுத்தார்.

அதைத் தொடர்ந்து துவங்கிய போட்டியில் புதிய தொடக்க வீரராக களமிறங்கிய கேமரூன் கிரீன் பவுண்டரியை பறக்க விட்டாலும் துஷார் தேஷ்பாண்டே வேகத்தில் 6 (4) ரன்களில் க்ளீன் போல்ட்டானார். அந்த நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய இசான் கிசான் 2வது ஓவரில் தீபக் சஹரின் ஸ்விங் பந்துக்கு பதில் சொல்ல முடியாமல் 7 (9) ரன்களில் நடையை கட்டினார். அப்போது மறுபுறம் களமிறங்கியிருந்த கேப்டன் ரோகித் சர்மா ஸ்ட்ரைக் எடுத்ததும் சுமாரான ஃபார்மில் தவிப்பதை தெரிந்த தோனி ஸ்டம்ப்களுக்கு மிகவும் அருகே வந்து நின்று பொதுவாகவே ஈரப்பதமான சூழ்நிலைகளில் சிறப்பாக ஸ்விங் செய்து சவாலை கொடுக்கக்கூடிய தீபக் சஹாரை சற்று மெதுவாக வீசுமாறு கேட்டுக் கொண்டார்.

- Advertisement -

அவர் சொன்னது போலவே தீபக் சஹர் வீசிய 5வது பந்தை சரியாக கணிக்கத் தவறிய ரோகித் சர்மா முட்டி போட்டு விக்கெட் கீப்பருக்கு பின் திசையில் அடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்தார். அதை ஜடேஜா கச்சிதமாக பிடித்ததால் பரிதாபமாக மீண்டும் டக் அவுட்டான ரோகித் சர்மா ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை முழுக்க முழுக்க தனதாக்கினார். அந்த பட்டியல்:
1. ரோகித் சர்மா : 16*
2. தினேஷ் கார்த்திக்/சுனில் நரேன்/மந்தீப் சிங் : தலா 15
3. அம்பத்தி ராயுடு : 14

பொதுவாக தொடக்க வீரராக விளையாடும் அவர் இந்த போட்டியில் சென்னையை குழப்பம் வகையில் மிடில் ஆர்டரில் களமிறங்கும் திட்டத்தை கையிலெடுத்த போதிலும் அதை தோனி முறியடித்தது ரசிகர்களை வியப்பில் அழ்த்தியது. அத்துடன் மிடில் ஆர்டரில் கடைசியாக களமிறங்கிய 11 இன்னிங்ஸில் ரோகித் சர்மா டக் அவுட்டாவது இது 4வது முறையாகும். அதனால் பேசாமல் நீங்கள் தொடக்க வீரராகவே விளையாடுங்கள் என்று ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: வீடியோ : மும்பையின் காசு கொடுத்து வாங்கும் ஃபார்முலாவை விட அந்த டீம் தான் எங்க இன்ஸ்பைரேஷன் – குஜராத் கேப்டன் பாண்டியா பேட்டி

அதன் காரணமாக 14/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற மும்பையை நல்ல ஸ்கோரை எடுப்பதற்காக போராடி வருகிறது. குறிப்பாக பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால் 130 ரன்களை எடுத்தால் கூட வெற்றி பெறலாம் என்ற எண்ணத்துடன் மும்பை போராடி வருகிறது.

Advertisement