யுவராஜ் தொடர்ந்து 3 சிக்ஸர்களை அடித்தபோது எனக்கு இதுதான் நினைவுக்கு வந்தது – சஹால் பேட்டி வீடியோ

Chahal
- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியின் யுவராஜ் சிங் பேட்டிங் செய்தபோது 14 ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் முதல் மூன்று பந்தினை யுவராஜ் சிக்ஸ் அடித்தார். நாலாவது பந்தினையும் சிக்ஸ் அடிக்க எண்ணிய யுவராஜ் தூக்கி அடிக்க பவுண்டரி எல்லையில் இருந்த சிராஜ் அற்புதமாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார்.

- Advertisement -

யுவராஜின் இந்த ஆட்டம் குறித்து போட்டி முடிந்தபின் பேசிய சாஹல் கூறியதாவது : உண்மையில் நான் அந்த ஓவரின் முதல் பந்து சிக்ஸ் போனபோது பெரிதாக வருத்தப்படவில்லை. ஆனால், தொடர்ந்து மூன்று சிக்ஸர்களையும் யுவராஜ் அடித்தபோது நான் உண்மையில் பயந்துவிட்டேன். எனக்குள் பதட்டம் ஏற்பட்டது.

ஏனெனில், 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியின்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 6 பந்தில் 6 சிக்ஸர்களை யுவராஜ் அடித்தார். அதேபோன்று இந்த போட்டியில் என் ஓவரில் அடிக்கப்போகிறார் என்று பயந்துவிட்டேன். ஆனால், அதனை மறந்து நான் தைரியமாக அடுத்த பந்தினை தூக்கி போட்டு அவரது விக்கெட்டினை கைப்பற்றினேன். அவரை வீழ்த்திய பிறகு தான் நான் உண்மையில் மகிழ்ச்சியினை அடைந்தேன்.

Yuvraj

மேலும், பெங்களூரு மைதானம் சிறிய மைதானம் ஆகும். எனவே, யுவராஜ் போன்ற வீரரை இந்த போட்டியில் வீழ்த்த வேண்டும் என்றால் என்னுடைய சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியாக வேண்டும் என்று நினைத்து அந்த பந்தினை வீசியதாக சாஹல் கூறினார். இந்த போட்டியில் சாஹல் 4 ஓவர்களை வீசி 38 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டினை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement