நிக்கோலஸ் பூரனை 16 கோடிக்கு வாங்கியது ஏன்? மாஸ்டர் முடிவின் பின்னணியை பகிர்ந்த கெளதம் கம்பீரின் பதில் இதோ

Gautam Gambhir Nicholas Pooran
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் 2023ஆம் ஆண்டு கோடை காலம் நடைபெறும் நிலையில் அதற்கான வீரர்கள் ஏலம் கொச்சியில் நடைபெற்று முடிந்தது. அதில் 10 அணிகளில் காலியாக இருந்த 87 இடங்களுக்கு 405 வீரர்கள் போட்டி போட்ட நிலையில் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருக்கும் ஆல் ரவுண்டர்களான சாம் கரண், பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன் ஆகியோர் 15 கோடிக்கு மேல் வாங்கப்பட்டது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் அவர்களுக்கு மத்தியில் வெஸ்ட் இண்டீஸின் நிக்கோலஸ் பூரன் 16 கோடி என்ற பெரிய தொகைக்கு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்காக வாங்கப்பட்டது ரசிகர்களை கிண்டலடிக்க வைத்தது.

- Advertisement -

ஏனெனில் இடது கை பேட்ஸ்மேனான அவர் ஆரம்ப காலங்களில் அதிரடி சரவெடியாக செயல்பட்டாலும் கடந்த சில வருடங்களாகவே பார்மை இழந்து சுமாராக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையில் நமீபியா போன்ற கத்துக்குட்டி அணிகளுடன் தோற்று முதல் சுற்றுடன் வெளியேறும் அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக படுமோசமாக செயல்பட்ட அவர் கடைசியில் கேப்டன்ஷிப் பதவி ராஜினாமா செய்தார்.

கம்பீரின் பதில்:
அதை விட ஐபிஎல் தொடரில் 2021 சீசனில் விதவிதமாக டக் அவுட்டாகி வெறும் 85 ரன்கள் மட்டும் எடுத்து படுமோசமாக செயல்பட்ட அவர் இந்த வருடம் ஹைதராபாத் அணியிலும் 14 போட்டிகளில் 305 ரன்கள் எடுத்து எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. அதனாலேயே ஹைதராபாத் அணி நிர்வாகம் கழற்றி விட்ட அவரை எந்த அணியும் வாங்காது அப்படியே வாங்கினாலும் 5 கோடியை தாண்ட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

KL Rahul LSG

ஆனால் ஏற்கனவே கேஎல் ராகுல் மற்றும் குவின்டன் டீ காக் ஆகிய 2 முதன்மை விக்கெட் கீப்பர்கள் இருக்கும் லக்னோ அணி அதுவும் 16 கோடி என்ற பெரிய தொகைக்கு அவரை வாங்கியது இந்த ஏலத்தின் மிகப்பெரிய சொதப்பல் முடிவு என்று இப்போதும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த சீசன்களை பற்றி கவலைப்படவில்லை என்று தெரிவிக்கும் லக்னோ அணியின் ஆலோசகர் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் 27 வயது மட்டுமே நிரம்பியுள்ள நிக்கோலஸ் பூரன் தங்களது அணியில் அடுத்த வருடம் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கையுடன் வாங்கியதாக தெளிவுபடுத்தியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அவர் கடந்த ஐபிஎல் சீசனில் என்ன செய்தார் என்பதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. அது அவருடைய திறமையாகும். இருப்பினும் அவரைப் போன்ற நட்சத்திர அந்தஸ்தும் அனுபவமும் திறமையும் கொண்ட ஒருவரை வாங்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருந்தோம். அதை விட தற்போது 26 – 27 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் தன்னுடைய கேரியரின் உச்சகட்ட செயல்பாடுகளை இப்போதிலிருந்து தான் துவங்கப் போகிறார்”

Gambhir

“மேலும் நீங்கள் எவ்வளவு ரன்கள் அடிக்கிறீர்கள் என்பதை பொறுத்து வெற்றி அமையாது. எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதில் தான் வெற்றி கிடைக்கும். அந்த வகையில் 3 – 4 போட்டிகளை வென்று கொடுக்கும் திறமை அவரிடம் உள்ளது. குறிப்பாக டாப் 4 இடங்களிலும் 6 – 7 ஆகிய இடங்களிலும் களமிறங்கி அதை செய்யக்கூடிய அவரைப் போன்ற திறமை கொண்ட வீரர்கள் எத்தனை பேர் உள்ளார்கள். எனவே அவரிடம் நிச்சயமாக நல்ல திறமை உள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்கஎப்பா நீ கிரேட் பிளேயர் தான், இந்தியாவுக்கு சவாலை கொடுத்த வங்கதேச வீரருக்கு இறுதியில் கிங் கோலி கொடுத்த அன்பு பரிசு

அதாவது பெரும்பாலான வீரர்கள் 27 வயதில் தான் தங்களுடைய கேரியரின் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்த துவங்குவார்கள். அந்த வகையில் கடந்த காலங்களில் நடந்ததை பற்றி கவலைப்படாமல் நல்ல திறமை கொண்டுள்ள நிகோலஸ் பூரன் வரும் சீசன்களில் தங்களது அணியில் மிரட்டலாக செயல்படுவார் என்று நம்புவதாலேயே வாங்கியதாக கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

Advertisement