IND vs RSA : ரோஹித்த கண்டா வரச்சொல்லுங்க ! தொடர் தோல்விகளால் ஹிட்மேனை மிஸ் செய்யும் இந்திய ரசிகர்கள்

Rohith
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்கு பின் இந்தியா தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் ஜூன் 12-ஆம் தேதியான நேற்று ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் நடைபெற்ற 2-வது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய சுமாராக பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 148/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவுக்கு தொடக்க வீரராக களமிறங்கிய ருத்ராஜ் 1 (4) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் 2 பவுண்டரி 3 சிக்சருடன் அதிரடியாக 34 (21) ரன்கள் எடுத்தார்.

ஆனால் அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 5 (7) ஹர்திக் பாண்டியா 9 (12) என முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அந்த சமயத்தில் மறுபுறம் போராடிக்கொண்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் 40 (35) ரன்களில் அவுட்டாக அக்ஷர் பட்டேலும் 10 (11) ரன்களில் நடையை கட்டினார். அதனால் 130 ரன்களைக் கூட தாண்டாது என எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவுக்கு நல்லவேளையாக தமிழகத்தின் தினேஷ் கார்த்திக் அதிரடியாக 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30* (21) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார்.

- Advertisement -

மிரட்டும் தென்ஆப்பிரிக்கா:
அதனால் 149 என்ற இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு பவர்பிளே ஓவர்களில் அனலாக பந்துவீசிய புவனேஸ்வர் குமார் ஹென்றிக்ஸ் 4 (3) பிரிட்டோரியஸ் 4 (5) வேன் டெர் டுஷன் 1 (7) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை ஒற்றை இலக்க ரன்களில் அவுட் செய்து இந்தியாவுக்கு சூப்பர் தொடக்கம் கொடுத்தார். அதனால் 29/3 என தென் ஆப்பிரிக்கா திணறியதால் இந்தியா வெற்றி பெற்று விடும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அடுத்ததாக களமிறங்கிய ஹென்றிச் க்ளாஸென் கேப்டன் பவுமா உடன் இணைந்து நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தார். 4-வது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த இந்த ஜோடியில் கேப்டன் பவுமா 35 (30) ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் மறுபுறம் அற்புதமாக பேட்டிங் செய்த க்ளாசென் இந்திய பவுலர்களை சரமாரியாக அடித்து 7 பவுண்டரி 5 சிக்சருடன் 81 (46) ரன்கள் குவித்து வெற்றியை உறுதிசெய்த ஆட்டமிழந்தார். இறுதியில் டேவிட் மில்லர் 20* (15) ரன்கள் எடுத்து பினிஷிங் கொடுத்ததால் 18.2 ஓவரிலேயே 149/6 ரன்கள் எடுத்த தென்னாபிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றி பெற்றது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் போட்டியில் வென்ற அந்த அணி இந்த வெற்றியால் 2 – 0* (5) என்ற கணக்கில் தொடரில் வலுவனா முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

- Advertisement -

ரோஹித் மிஸ்:
மறுபுறம் முதல் போட்டியில் பேட்டிங்கில் மிரட்டினாலும் பந்துவீச்சில் சொதப்பிய இந்தியா இம்முறை இரண்டிலுமே சுமாராக செயல்பட்டு சொந்த மண்ணில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து தலை குனிந்துள்ளது. இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு எடுப்பதை சரியாக பயன்படுத்தியுள்ள தென்னாப்பிரிக்கா இந்தியாவை சரமாரியாக அடித்து வருவதால் இந்திய ரசிகர்கள் அவர் எப்போது வருவார் என்று ஏக்கமடைந்துள்ளனர்.

ஏனெனில் முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பின் கடந்த நவம்பர், பிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்களில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக அவரது தலைமையில் இந்தியா களமிறங்கிய 3 போட்டிகள் கொண்ட 3 டி20 தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் 9 தொடர் வெற்றிகளை பெற்று சொந்த மண்ணில் கில்லியாக வெற்றி நடை போட்டது.

- Advertisement -

அவர் இந்த தொடரில் இருந்திருந்தால் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டாலும் கூட நிச்சயம் கேப்டனாக அற்புதமாக செயல்பட்டிருப்பார். ஏனெனில் அனுபவமில்லாத ரிஷப் பண்ட் இந்திய பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவதில் மொத்தமாக சொதப்புவது தோல்விக்கு முக்கிய பங்காற்றுவது கண்கூடாக பார்க்க முடிகிறது. அப்படிப்பட்ட அவர் இல்லாததை பயன்படுத்திய தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை முதல் இலங்கை தொடர் வரை 12 போட்டிகளில் தொடர்சியாக வெற்றி நடை போட்டு வந்த இந்தியாவை தடுத்து நிறுத்தி தோல்வியை அடுத்தடுத்த 2 தோல்விகளை பரிசளித்துள்ளது.

கண்டா வரச்சொல்லுங்க:
1. அதைவிட 2022இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இதுவரை 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, தற்போது 2* டி20 என பங்கேற்ற 7 போட்டிகளிலும் ஒரு வெற்றி கூட பெறாமல் தொடர் தோல்விகளை சந்தித்து அந்த அணியிடம் மண்டியிட்டு வருகிறது.

2. ஆச்சர்ய்மாக அந்த 7 போட்டிகளிலும் ரோகித் சர்மா காயம் மற்றும் ஓய்வு காரணமாக பங்கேற்கவில்லை. ஆனால் இதே 2022இல் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக ரோகித் சர்மா தலைமையில் 11 போட்டிகளில் விளையாடிய இந்தியா ஒரு முறை கூட தோற்கவில்லை.

3. மொத்தத்தில் இந்த வருடம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும் ஒட்டு மொத்தமாகவும் ரோகித் சர்மா இல்லாமல் இந்தியா ஒரு வெற்றி கூட பதிவு செய்யவில்லை என்பதால் அவரைக் கண்டால் சீக்கிரம் இந்திய அணிக்கு வரச்சொல்லுங்கள் என்று இந்திய ரசிகர்கள் சோகத்துடன் கூறுகிறார்கள்.

Advertisement