வெளிநாட்டு கிங் ! கிறிஸ் கெயிலின் ஆல் டைம் சாதனையை உடைத்த டேவிட் வார்னர் – புதிய டி20 உலகசாதனை

David Warner DC
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் மே 5-ஆம் தேதி நடைபெற்ற 50-ஆவது லீக் போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதின. ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த அபோட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 207/3 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் தொடக்க வீரர் மந்தீப் சிங் டக் அவுட்டாக அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 10 (7) ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அதிரடி காட்டிய கேப்டன் ரிஷப் பண்ட் 26 (16) ரன்கள் எடுத்து அவுட்டாகி சென்றார்.

David Warner Rovman Powell

- Advertisement -

அதனால் 85/3 என தடுமாறிக் கொண்டிருந்த டெல்லியை மறுபுறம் தொடர்ச்சியாக பேட்டிங் செய்த டேவிட் வார்னருடன் கைகோர்த்த இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் போவெல் அதிரடியாக ரன்களை சேர்க்க தொடங்கினார். கடைசி 10 ஓவர்களில் ஹைதராபாத் பவுலர்களை புரட்டி எடுத்த இந்த ஜோடியில் டேவிட் வார்னர் 12 பவுண்டரி 3 சிக்சருடன் 92* (58) ரன்கள் எடுக்க 3 பவுண்டரி 6 சிக்சருடன் 67* (35) ரன்கள் எடுத்த போவல் சிறப்பான பினிஷிங் கொடுத்தார்.

மிரட்டிய டெல்லி:
அதை தொடர்ந்து 208 என்ற பெரிய இலக்கை துரத்திய ஹைதராபாத்துக்கு கேப்டன் கேன் வில்லியம்சன் 4 (11) அபிஷேக் சர்மா 7 (6) ஆகிய தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் ராகுல் திரிபாதியும் 22 (18) ரன்களில் நடையை கட்டியதால் 37/3 என ஹைதெராபாத் மோசமான தொடக்கத்தை பெற்றது. அந்த நிலையில் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்கம் மற்றும் நிக்கோலஸ் பூரன் அதிரடியாக 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை வெற்றிப் பாதைக்கு திரும்ப வைத்தபோது 4 பவுண்டரி 3 சிக்சருடன் 42 (25) ரன்கள் எடுத்த மார்க்ரம் அவுட்டானார்.

DC vs SRH Kane Williamson

அந்த மோசமான நிலையில் கை கொடுக்க வேண்டிய ஷஹாங்க் சிங் 10 (6) சீன் அபோட் 7 (5) போன்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகி சென்றானர். மறுபுறம் தனி ஒருவனாக 2 பவுண்டரி 6 சிக்சர்கள் பறக்கவிட்டு 62 (34) ரன்கள் எடுத்து வெற்றிக்கு போராடிய நிக்கோலஸ் பூரனும் இறுதியில் அவுட்டானதால் 20 ஓவர்களில் 183/8 ரன்கள் மட்டுமே எடுக்க ஹைதராபாத் தோல்வியை சந்தித்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக பந்துவீச்சில் கலக்கிய கலீல் அகமது 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

வார்னர் மாஸ்:
இதனால் 21 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்ற டெல்லி பங்கேற்ற 10 போட்டிகளில் 5-வது வெற்றியைப் பதிவு செய்து புள்ளி பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறி ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அதே சமயம் ஐதராபாத் பங்கேற்ற 10 போட்டிகளில் 5-வது தோல்வியை பதிவு செய்து 6-வது இடத்துக்கு பின் தங்கினாலும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இந்த வெற்றிக்கு 92 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய டேவிட் வார்னர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

David Warner vs SRH 2

அதிலும் கடந்த 2014 முதல் ஒவ்வொரு வருடமும் குறைந்தது 500க்கும் மேற்பட்ட ரன்கள் அடித்து ஹைதெராபாத் அணிக்கு 2016இல் கேப்டனாக சாம்பியன் பட்டத்தையும் பெற்றுக்கொடுத்த டேவிட் வார்னரை 2021இல் முதல் முறையாக ரன்கள் அடிக்க தடுமாறினார் என்பதற்காக அந்த அணி நிர்வாகம் கழற்றி விட்டது.

- Advertisement -

இருப்பினும் சிரித்த முகத்துடன் இருந்த வார்னர் அதன்பின் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் தொடர் நாயகன் விருதை வென்று பார்முக்கு திரும்பி 6.5 கோடி என்ற நல்ல தொகைக்கு டெல்லி அணிக்காக விளையாட துவங்கியுள்ளார். அந்த நிலையில் நன்றி மறந்து தன்னை அவமானப்படுத்தி வெளியேற்றிய ஹைதராபாத்துக்கு எதிராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் தனக்கு நிகழ்த்திய கொடுமைக்கு அந்த அணி நிர்வாகத்தை பழிக்கு பழி வாங்கியுள்ளார்.

Gayle

உலகசாதனை:
முன்னதாக இந்த போட்டியில் அரைசதம் கடந்து 92* ரன்கள் அடித்த டேவிட் வார்னர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக அரை சதங்கள் அடித்த பேட்ஸ்மென் என்ற வெஸ்ட் இண்டீஸ் சூறாவளி புயல் கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. டேவிட் வார்னர் : 89* (321 போட்டிகள்)
2. கிறிஸ் கெயில் : 88 (463 போட்டிகள்)
3. விராட் கோலி : 77 (337 போட்டிகள்)

மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த 3-வது பேட்ஸ்மேன் என்ற ரோகித் சர்மாவின் சாதனையையும் முறியடித்தார். புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 6499
2. ஷிகர் தவான் : 6153
3. டேவிட் வார்னர் : 5805*
4. ரோஹித் சர்மா : 5766

இப்படி பல ரன்கள், சாதனைகள் படைத்து வரும் டேவிட் வார்னர் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வெளிநாட்டு பேட்ஸ்மன் என்ற சாதனையுடன் வெளிநாட்டு கிங்காக வலம் வருகிறார்.

Advertisement