கடந்த ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் 8 அணிகள் மட்டுமே பங்கேற்று விளையாடி வந்த நிலையில் இந்த ஆண்டு 15-வது ஐபிஎல் தொடரில் குஜராத் மற்றும் லக்னோ ஆகிய அணிகள் புதிதாக இணைக்கப்பட்டு மொத்தம் 10 அணிகளுடன் இந்த தொடரானது மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த தொடரில் புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் குஜராத் அணிகள் தங்களது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்து அசத்தி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி இதுவரை விளையாடியுள்ள 9 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் கெத்தாக அமர்ந்துள்ளது. கிட்டத்தட்ட தற்போதே பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ள குஜராத் அணி இனியும் வெற்றியை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் அந்த அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என அனைவருமே தங்களது அற்புதமான பங்களிப்பை போட்டிக்கு போட்டி சிறப்பாக வெளிப்படுத்தி வருவதால் அந்த அணியானது தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று வருகிறது. இந்த ஆண்டுதான் அறிமுகமாகியிருந்தாலும் அந்த அணியின் அசத்தலான செயல்பாடு அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

அதோடு இந்த தொடரில் இன்று நடைபெற்ற 43-வது லீக் போட்டியில் பெங்களூரு அணியை வீழ்த்திய குஜராத் அணியானது ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணியின் பிரமாண்டமான சாதனை ஒன்றினையும் சமன் செய்துள்ளது.
அந்த வகையில் இன்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு அணியை சேஸிங் செய்து விளையாடிய குஜராத் அணியானது போட்டியின் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. இப்படி ஒரு லீக் போட்டியின் கடைசி ஓவரில் வெற்றி பெறுவது அந்த அணிக்கு இந்த தொடரில் 5 ஆவது முறையாக நடைபெற்று இருக்கிறது. இதற்கு முன்னதாக சிஎஸ்கே 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 5 முறை போட்டியை கடைசி ஓவரில் சி.எஸ்.கே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கேப்டன் பதவியில் இருந்து திடீரென ஜடேஜா விலகியது ஏன்? இதுதான் காரணமா? – புதிய குழப்பம்
இதன் காரணமாக சிஎஸ்கே அணியின் அந்த சாதனையை தற்போது குஜராத் அணி சமன் செய்துள்ளது. அதோடு இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னர் இன்னும் ஐந்து லீக் போட்டிகளில் குஜராத் அணி விளையாட இருப்பதனால் மேலும் இதுபோன்று கடைசி ஓவர் திரில்லிங் வெற்றி பெற்று சி.எஸ்.கே அணியின் அந்த சாதனையை முறியடிக்கவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.



