பரவால்ல வெற்றிய நீங்க வெச்சுக்கோங்க! லக்னோவுக்கு பரிசளித்த பஞ்சாப் – வகைவகையாய் கலாய்க்கும் ரசிகர்கள்

Shikar Dhawan Pbks
- Advertisement -

மும்பை நகரில் கோலாகலமாக துவங்கி ஒரு மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 29-ஆம் தேதி நடைபெற்ற 42-ஆவது லீக் போட்டியில் லக்னோ மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் மோதின. புனேவில் உள்ள எம்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் கையிலிருந்த எளிதான வெற்றியை லக்னோவிடம் பஞ்சாப் பரிசளித்ததைப் பற்றி பார்ப்போம். அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோவுக்கு தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் 6 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய நிலையில் அடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா உடன் ஜோடி சேர்ந்த மற்றொரு தொடக்க வீரர் குவின்டன் டி காக் அதிரடியாக ரன்களை குவித்தார்.

Quinton De Kock Walking

- Advertisement -

2-வது விக்கெட்டுக்கு பொறுப்புடனும் அதிரடியாகவும் ரன்களைச் சேர்த்த இந்த ஜோடி 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் 98/1 என லக்னோ நல்ல நிலைமையை எட்டிய போது 4 பவுண்டரி 2 சிக்சருடன் 46 (37) ரன்கள் எடுத்து குயின்டன் டி காக் ஆட்டமிழந்தார். அப்போது எதிர்பாரா வகையில் தீபக் ஹூடா 34 ரன்களில் ரன் அவுட்டானதை பயன்படுத்திய பஞ்சாப்பின் காகிஸோ ரபாடா அடுத்து வந்த க்ருனால் பாண்டியா 7 (7), ஆயுஷ் படோனி 4 (4) ஆகியோரை ஒரே ஓவரில் அவுட் செய்து போட்டியில் தனது அணி பக்கம் திருப்பினார்.

பஞ்சாப் அசத்தல்:
அந்த நிலைமையில் மார்கஸ் மார்க்கஸ் ஸ்டோனிஸ் 1 (4) ஜேசன் ஹோல்டர் 11 (8) ஆகியோரையும் சொற்ப ரன்களில் பஞ்சாப் அவுட்டாக்கியதால் 98/1 என இருந்த லக்னோ திடீரென 126/7 என்று தடுமாறியது. இறுதியில் துஷ்மந்தா சமீரா 17 (10) மோசின் கான் 13* (6) எடுத்த போதிலும் 180க்கும் மேற்பட்ட ரன்களை எடுக்க வேண்டிய லக்னோ 20 ஓவர்களில் 153/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அளவுக்கு சிறப்பாக கட்டுப்படுத்திய பஞ்சாப் சார்பில் அதிகபட்சமாக ரபாடா 4 விக்கெட்டுகளையும் ராகுல் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

Ravi Bisnoi

அதை தொடர்ந்து 154 என்ற எளிய இலக்கை துரத்திய பஞ்சாப் எளிதாக வெற்றிபெறும் என அனைவரும் நினைத்த வேளையில் அதற்கேற்றார்போல் கேப்டன் மயங்க் அகர்வால் அதிரடியாக 2 பவுண்டரி 2 சிக்சருடன் 25 (17) ரன்கள் எடுத்து திடீரென ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கி தடுமாறிக் கொண்டிருந்த ஷிகர் தவான் 5 (15) ரன்களில் நடையை கட்ட அடுத்து வந்த ராஜபக்சா 9 (7) லியாம் லிவிங்ஸ்டன் 18 (16) ஜிதேஷ் சர்மா 2 (5) போன்ற மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக சொற்ப ரன்களில் அவுட்டாகி பஞ்சாப்பின் எளிதான வெற்றியை கேள்விக்குறியாக்கினர்.

- Advertisement -

பஞ்சாப் சொதப்பல்:
அதே சமயம் மறுபுறம் 5 பவுண்டரி உட்பட 32 (28) ரன்கள் எடுத்த ஜானி பேர்ஸ்ட்டோவும் நம்பிக்கை கொடுத்து ஆட்டமிழந்த நிலையில் கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்ட போது அதை அடிக்க பேட்ஸ்மேன்கள் யாருமில்லாததால் பஞ்சாப் தோல்வி உறுதியானது. இறுதியில் ரிஷி தவான் 21* (22) ரன்கள் எடுத்தாலும் 20 ஓவர்களில் 133/8 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணி பரிதாபமாக தோற்றது.

Mosin Khan LSG

மறுபுறம் குறைவான ரன்களை அடித்தாலும் பந்துவீச்சில் கச்சிதமாகப் செயல்பட்ட லக்னோ 20 ரன்கள் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது. அந்த அணிக்கு பந்துவீச்சில் அதிகபட்சமாக மோசின் கான் 3 விக்கெட்டுகளையும் துஷ்மந்தா சமீரா மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

- Advertisement -

பரிசளித்த பஞ்சாப்:
இத்தனைக்கும் இப்போட்டியில் டாஸ் வென்று 180 ரன்கள் அடிக்க வேண்டிய லக்னோவை சிறப்பாக பந்துவீசி மடக்கி பிடித்தாலும் பேட்டிங்கில் 150 ரன்களைக் கூட அடிக்க முடியாத பஞ்சாப் 5-வது தோல்வியை பதிவு செய்து 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த போட்டி மட்டுமல்லாது 2008 முதல் ஒவ்வொரு வருடமும் இதுபோன்ற எளிய போட்டியில் கூட சொதப்பல்களை செய்வதன் காரணமாகவே தரமான நட்சத்திர வீரர்கள் இருந்தபோதினும் இதுநாள் வரை அந்த அணியால் ஒரு கோப்பையை கூட வெல்ல முடியவில்லை.

அதிலும் சமீப காலங்களில் 19 ஓவர்கள் வரை கையிலிருந்த வெற்றியை கடைசி ஓவரில் சொதப்பி எதிரணிக்கு வெற்றியை பஞ்சாப் பரிசளித்ததை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. குறிப்பாக 2021 ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் ராஜஸ்தான் நிர்ணயித்த 186 ரன்கள் இலக்கை துரத்திய பஞ்சாப் 19 ஓவரில் 182/2 என வெற்றியை நெருங்கியபோது கடைசி ஓவரில் இளம் வீரர் கார்த்திக் தியாகியிடம் சரணடைந்து 4 ரன்களை எடுக்க முடியாமல் 183/4 ரன்களை மட்டுமே எடுத்து வெறும் 2 ரன்களில் தோற்று வெற்றியை எதிரணிக்கு பரிசளித்ததையெல்லாம் ரசிகர்கள் காலத்திற்கும் மறக்க மாட்டார்கள்.

இதையும் படிங்க : என்னா மனசுயா! சச்சின், கில்கிறிஸ்ட் மாதிரி நேர் வழியில் நடந்து கொண்ட டிகாக் – ரசிகர்கள் பாராட்டு

அந்த போட்டிக்கு நேற்றைய சொதப்பல் எவ்வளவோ பரவாயில்லை என்று கலாய்க்கும் ரசிகர்கள் ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் என்பது எதிரணிகளுக்கு எளிதான வெற்றியையும் கோப்பையையும் பரிசளிப்பதற்காக படைக்கப்பட்ட அணி என்று வகை வகையாக சமூக வலைதளங்களில் கலாய்க்கின்றனர்.

Advertisement