பாண்டிங் என்னிடம் கூறிய இந்த வார்த்தைகள் தான் என்ன ஊக்கப்படுத்தின – ஆவேஷ் கான் ஓபன்டாக்

avesh
- Advertisement -

டெல்லி அணியை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளரான ஆவேஷ் கான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். இதுவரை 25 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் இன்றி தவித்த டெல்லி அணிக்கு தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் கை கொடுத்த ஆவேஷ் கான் விக்கெட்டுகளை அள்ளி அசத்தினார். அதோடு தற்போது இந்திய அணிக்கும் தேர்வாகியுள்ளார்.

avesh 1

- Advertisement -

இந்நிலையில் தான் டெல்லி அணியில் இருந்தபோது பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தன்னை எவ்வாறு ஊக்கப்படுத்தினார் என்பது குறித்து தற்போது அவர் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த சீசனின் போது ரபாடா மற்றும் நோர்க்கியா ஆகிய இருவருக்குமே காயம் ஏற்பட்டதால் எனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியும். அதனால் கொஞ்சம் பதட்டமாகவே இருந்தேன்.

ஆனால் இந்த சீசனுக்கு முன்னர் என்னை அழைத்த பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் என்னிடம் வந்து உனக்கான நேரம் வந்துவிட்டது. எனவே நீ உன்னுடைய முழு திறமையையும் இந்த உலகிற்கு காட்ட வேண்டும். உன் நிறைய திறமை என்ன என்பது எங்களுக்கு தெரியும். அதை நீ உலகத்திற்கும் காட்ட வேண்டும் என்று பாண்டிங் என்னிடம் கூறினார். அவர் கூறிய அந்த வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின.

அதன் காரணமாகவே நான் பலம் பெற்று சிறப்பாக பந்து வீசினேன் என அவர் கூறினார். 25 வயதான ஆவேஷ் கான் மணிக்கு 140 கிலோ மீட்டருக்கு மேல் பந்து வீசுவது மட்டுமின்றி நல்ல வெறியேஷன்களிலும் பந்து வீசும் திறன் உடையவர். இதன் காரணமாக அவரது பந்து வீச்சுக்கு நிறைய விக்கெட்டுகளும் கிடைத்தன.

- Advertisement -

இதையும் படிங்க : உனக்கான நேரம் வரும் வரை காத்திரு. இளம் வீரருக்காக வருந்திய – ரவிசந்திரன் அஷ்வின்

அதுமட்டுமின்றி போட்டியின் துவக்க ஓவர்கள், மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என எந்த சூழ்நிலையிலும் பந்துவீசும் திறனுடைய அவர் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அதன் காரணமாகவே தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணியிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி எதிர்வரும் ஐபிஎல் தொடரில் நிச்சயம் அவருக்கு நல்ல போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement