மும்பை அணி கழட்டிவிட்ட ஹார்டிக் பாண்டியாவை பெரிய தொகைக்கு நேரடியாக எடுக்க விரும்பும் – ஐ.பி.எல் அணி

pandya
- Advertisement -

இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் தொடங்க இருக்கும் 15-வது ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் இன்னும் சில நாட்களில் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதற்கு முன்னர் தற்போது இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 8 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை அணியும் தங்களது அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் விவரத்தை அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

mi

- Advertisement -

அதன்படி மும்பை அணியில் முதல் நபராக கேப்டன் ரோகித் சர்மாவை 16 கோடி ரூபாய்க்கு அந்த அணி தக்க வைத்தது. பின்னர் அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை 12 கோடி ரூபாய்க்கும், சூர்யகுமார் யாதவை 8 கோடி ரூபாய்க்கும், ஆல்ரவுண்டர் பொல்லார்டை 6 கோடி ரூபாய்க்கும் தக்கவைத்தது.

இவர்கள் 4 பேரை தவிர பாண்டியா சகோதரர்கள், இஷான் கிஷன், டிரெண்ட் போல்ட் போன்ற வீரர்கள் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டனர். இந்நிலையில் ஹர்திக் பாண்டியாவை நேரடியாக ஏலத்திற்கு முன்பே அணியில் எடுக்க அகமதாபாத் அணி ஆர்வம் காட்டுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

pandya 1

அதன்படி புதிதாக வரவிருக்கும் அகமதாபாத் அணியை வலுப்படுத்த ஹார்டிக் பாண்டியா பெரிய தொகைக்கு அவர்கள் அணிக்கு விளையாட பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். நிச்சயம் பாண்டியா 12 கோடி முதல் 16 கோடி ரூபாய் வரை அகமதாபாத் அணிக்கு வருவார் என்ற உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : தோனியின் பெருந்தன்மை. ஜடேஜா 16 கோடிக்கு தக்கவைக்கப்பட காரணம் இதுதானாம் – விவரம் இதோ

மேலும் லக்னோ மற்றும் அஹமதாபாத் அணிகள் மெகா ஏலத்திற்கு முன்பாகவே 2 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரரை நேரடியாக தேர்வு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement