டேவிட் வார்னர் அடுத்த ஆண்டு விளையாடப்போகும் ஐ.பி.எல் அணி இதுதான் – சேவாக் கணிப்பு

Sehwag
- Advertisement -

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய டேவிட் வார்னர் தொடர்ந்து தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தொடரின் பாதியில் கேப்டன் பொறுப்பில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் அணியில் இருந்தும் நீக்கப்பட்ட அவர் கடைசி சில போட்டிகளில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படாமல் பெஞ்சில் அமர்ந்து அணிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார்.

Warner

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் அடுத்த ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்னர் ஹைதராபாத் அணி டேவிட் வார்னரை விடுவிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதே வேளையில் தற்போது ஐபிஎல் தொடர் முடிந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

அதுமட்டுமின்றி இந்த தொடரின் தொடர் நாயகன் விருதையும் வென்றுள்ளார். மீண்டும் அவரது பேட்டிங் பார்ம் திரும்ப தற்போது அவர் எந்த ஐபிஎல் அணிக்காக அடுத்த ஆண்டு விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேட்டியளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் கூறுகையில் :

warner 2

அடுத்த ஆண்டு நிச்சயமாக வார்னர் புதிதாக இணைந்துள்ள இரண்டு அணிகளில் ஒன்றில் தான் தேர்வு செய்யப்படுவார். ஏனெனில் அடுத்த ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் இரண்டு புதிய அணிகளுக்கு ஒரு நல்ல துவக்க வீரர் மற்றும் கேப்டன் வேண்டும். அந்த வகையில் நிச்சயம் வார்னரை துவக்க வீரராகவும், கேப்டனாகவும் தேர்வு செய்வார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்த ஆண்டு வார்னர் விளையாடப்போகும் ஐ.பி.எல் அணி அதுதான் – பிராட் ஹாக் கணிப்பு

மேலும் அவருடன் சேர்த்து இன்னும் இரண்டு வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை சுற்றியே ஒரு அணி கட்டமைக்கப்படும். எனவே நிச்சயம் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகளில் ஒன்றில்தான் வார்னர் நிச்சயம் கேப்டன் மற்றும் வீரராக விளையாடுவார் என்று சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement