இதுதான் உங்களுக்கு சரியான சோதனை.இந்திய அணி இதில் வெற்றி பெற்றா வேறலேவல் – லக்ஷ்மனன் பேட்டி

Laxman
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது 4-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் தொடராக இந்த இங்கிலாந்து தொடர் அமைந்துள்ளது.

INDvsENG 1

- Advertisement -

கடந்த தொடரின் போது ஏற்பட்ட தோல்வியை சரிகட்டும் வகையில் இந்த இங்கிலாந்து தொடர் அமைய இருப்பதால் அதில் வெற்றி பெற இந்திய அணி கடுமையாக போராடும் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வர பிரபலங்கள் பலரும் இந்த டெஸ்ட் தொடர் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ் லட்சுமணன் இந்த இங்கிலாந்து தொடர் குறித்து பேசுகையில் கூறியதாவது : டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகப்பெரிய சவால் என்றால் அது வெளிநாடுகளில் விளையாடுவதுதான். 2007 ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது கிடையாது.

IND

இதனை கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் அறிந்திருப்பார்கள். அதனால் இம்முறை இந்திய அணி ஜெயிக்க வேண்டும் என்றும் அவர்கள் எண்ணுவார்கள். இம்முறை இந்திய அணி வெற்றி பெறுவதற்கான அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது என லட்சுமணன் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : எதிர்வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தங்களை பலமாக நிலைநிறுத்திக்கொள்ள இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலப்பரிட்சை.

IND

இந்த ஆண்டு இறுதியில் தென்ஆப்பிரிக்கா இன்று இந்திய அணி விளையாட இருந்தாலும் இந்த இங்கிலாந்து தொடர் இந்திய அணிக்கு சரியான சோதனை இதில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என லட்சுமணன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement