முதல் டி20 போட்டியிலேயே வரலாற்றில் இடம்பிடித்த தேவ்தத் படிக்கல் – வேறலெவல் சாதனை விவரம் இதோ

Padikkal
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி தற்போது கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் க்ருனால் பாண்டியா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதன் காரணமாக அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 9 வீரர்கள் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்படி இன்றைய இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்கள் வந்துள்ளன.

INDvsSl-1

- Advertisement -

இந்திய வீரர்களான இஷான் கிசன், சூரியகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, தீபக் சஹர் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் இன்றைய போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக புதுமுக வீரர்கள் தேவ்தத் படிக்கல், நிதீஷ் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், சக்காரியா ஆகியோர் அறிமுக வீரர்களாக விளையாடி வருகின்றனர்.

இன்றைய போட்டியில் இந்திய அணி 5 பேட்ஸ்மேன்கள் மற்றும் 6 பவுலர்களுடன் விளையாடி வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 132 ரன்கள் குவிக்க 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின்போது 3-வது வீரராக களம் இறங்கிய அறிமுக வீரர் படிக்கல் 23 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Padikkal

இருப்பினும் அவர் இந்த போட்டியில் அறிமுகமானதன் மூலம் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான சாதனை ஒன்றை படிக்கல் நிகழ்த்தியுள்ளார். அந்த சாதனை யாதெனில் 2000வது ஆண்டிற்கு பிறகு பிறந்த வீரர்கள் இந்திய அணிக்காக அறிமுகமாவது ஆண்கள் கிரிக்கெட்டில் இவரே முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதன்படி 2000வது ஆண்டின் ஜூலை மாதம் ஏழாம் தேதி பிறந்த இவர் தற்போது 2000வது ஆண்டில் பிறந்து இந்திய அணியில் அறிமுகமான முதல் வீரர் என்ற பெருமையை தற்போது படைத்துள்ளார்.

பெண்கள் கிரிக்கெட்டில் ஏற்கனவே இந்த சாதனையை ஷபாலி வர்மா படைத்து இருந்தாலும் ஆண்கள் கிரிக்கெட் சார்பில் இந்த சாதனையை படைக்கும் முதல் வீரராக படிக்கல் தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement