இந்திய அணியின் வீரரான இவர் பேட்டிங் செய்தால் எவ்ளோ காசு குடுத்து வேணுனாலும் போயி பார்ப்பேன் – ஆம்ப்ரோஸ் ஓபன்டாக்

Ambrose
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளர்கள் என்று நாம் கூறினாலே நினைவுக்கு வருவது மேற்கிந்திய தீவுகள் அணியின் பவுலர்கள் தான். ஏனெனில் கிட்டத்தட்ட 7 அடி உயரத்தில் நல்ல திடமான வேகப்பந்து வீச்சாளர்கள் 1980 முதல் 2000 வரை சர்வதேச கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்தனர். அவர்களில் குறிப்பாக ஆம்புரோஸ், வால்ஸ், பெஞ்சமின் உட்பட பல வேகப்பந்து வீச்சாளர்கள் சர்வதேச கிரிக்கெட்டை ஆட்டிப் படைத்து வந்தனர். அந்தவகையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் ஆம்புரோஸ் தனது பவுன்சர்கள் மூலம் பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Curtly Ambrose

- Advertisement -

வாலஸ் உடன் இணைந்து அவர் வீசிய ஓவர்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றவை. டெஸ்ட் கிரிக்கெட்டில் 98 போட்டிகளில் விளையாடியுள்ள ஆம்ப்ரோஸ் 405 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோன்று ஒருநாள் கிரிக்கெட்டிலும் 225 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு வெற்றிகரமான வேகப்பந்து வீச்சாளராக சர்வதேச கிரிக்கெட்டில் திகழ்ந்துள்ளார். இந்நிலையில் தற்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில் :

இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் : இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நான் மிக தீவிரமான ரசிகன் அவரது ஆட்டத்தை உலகில் எந்த ஒரு மைதானத்திலும் நான் நேரில் சென்று பணம் கொடுத்து பார்க்கும் அளவிற்கு நான் தயார். அந்த அளவிற்கு கோலியுடைய ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மூன்று வகையான கிரிக்கெட்டிலும் நேர்த்தியாக ஆடுகிறார்.

Kohli

தற்போது உள்ள கிரிக்கெட் வீரர்களில் கோலியை மிஞ்ச ஆள் கிடையாது மேலும் இந்திய அணியின் கேப்டனாகவும் அவர் சிறப்பான வீரர் என்று ஆம்புரோஸ் புகழ்ந்துள்ளார். ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் கோலி ஏகப்பட்ட சாதனைகளை நாளுக்கு நாள் படைத்து வருவதால் ரசிகர்கள் மத்தியிலும் சரி பிரபலங்கள் மத்தியிலும் சரி பெரிய உச்சத்தில் இருக்கும் வேளையில் தற்போது ஆம்புரோஸ் அவரை புகழ்ந்து கூடுதல் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

kohli 1

மேலும் அவரின் இந்த கருத்துக்கு ரசிகர்களும் தங்களது கருத்துக்களை இணையத்தில் பதிலாக தெரிவித்து வருகின்றனர். தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற கோலி தற்போது தோனியை மிஞ்சும் அளவிற்கு இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இருப்பினும் அவரிடம் உலகக்கோப்பையை கைப்பற்றவில்லை என்ற ஒருகுறை மட்டும்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement