டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அணியில் தேர்வான இந்திய வீரருக்கு கொரோனா உறுதி – வெளியான அதிர்ச்சி தகவல்

Ind-lose
- Advertisement -

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொல்கத்தா அணியின் வீரர்களான வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரொனோ உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற அணிகளை சேர்ந்த வீரர்களுக்கும் அடுத்தடுத்துக் கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இந்த ஐபிஎல் தொடரானது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடர் நடைபெற வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

sandeep

- Advertisement -

அதற்குள் ஜூன் மாதம் 18ஆம் தேதி நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த போட்டிக்கான அணியில் இடம் பெற்று இருக்கும் வீரர்கள் விரைவில் இங்கிலாந்து சென்று அந்த போட்டியில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ள கொல்கத்தா அணியின் வீரரான பிரசித் கிருஷ்ணாவிற்கு கொரோனா உறுதியாகியுள்ளது. டெஸ்ட் போட்டிக்கான அணியில் கூடுதல் வீரராக இடம்பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணாவிற்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அது குறித்து பேசிய கொல்கத்தா நிர்வாகி கூறுகையில் :

Prasidh

பிரசித் கிருஷ்ணாவிற்கு கொரோனா உறுதியானது உண்மை தான். முதலில் எங்கள் அணியை சேர்ந்த டிம் சைபர்ட்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது இவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகக் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்ட அவர் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

prasidh-krishna

இந்த சிகிச்சை முடிந்து நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே அவர் இந்திய அணியுடன் இணைந்து இங்கிலாந்து செல்ல முடியும் என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கொரோனாவால் சிகிச்சை பெற்று வந்த சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக்கல் ஹஸி தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement